Tuesday, October 27, 2009

வீணையில்லா ராகம்..!



அன்று மாலைப் பொழுது. சூரியன் தன் காதலியைச் சந்திக்கும் சந்தோஷத்தோடு தன் அன்றாட வேலையை முடித்துக் கொண்டு விடைபெறும் நேரமது. ராதாவோ தன் காதலனின் நினைவுகளோடு கடற்கரைச்சாலையிலே அமர்ந்திருக்கின்றாள். அவளது கண்களில் இருந்து நீர் தாரை தாரையாகச் சொரிந்து கொண்டிருக்கää அவளது உதடுகளும் ~~கீதன்ää கீதன்... என்னோட கீதன் எனக்கு வேண்டும் என்று அவளை அறியாமலேயே துடித்துக் கொண்டிருக்கின்றன. எவராலும் எதைக் கொண்டும் உடைக்க முடியாமல் இரும்பால் அடைக்கப்பட்ட தன் இதயத்தை ஒரு சிறு புன்னகையால் பறித்துச் சென்ற கீதனைப் பற்றிய நினைவுகளும் அவள் இதயத்தை மீண்டும் ஒருமுறை தீண்டிப் பார்க்கின்றன. கீதன்ää ராதா வேலை பார்க்கும் அலுவலகப் பொறுப்பாளருக்குத் தெரிந்தவராக முதன் முதலில் ராதாவிற்கு அறிமுகமானான். ஆனால் தொடர்புகள் அத்துடன் நிறைவுபெறாமல் மீண்டும் மீண்டும் தொடருமென்று ராதாவோää கீதனோ நினைக்கவில்லை. இரண்டு வாரங்களுக்குப் பிறகு இருவரதும் சந்திப்பு ராதாவின் அலுவலகத்திலேயே மீண்டும் தொடர்ந்தது. அன்றுää முதல் சந்திப்பை விட சற்று அதிகமான நேரங்கள் கீதனுடன் கதைக்கவேண்டிய தேவையும் ஏற்பட்டது ராதாவிற்கு. காரணம் கீதன்ää அருணின் அலுவலக வேலையாக ராதாவைச் சந்திக்க நேரிட்டதுதான். அன்று பரஸ்பரம் அலுவலக வேலைகளுடன்ää தம்மை இருவரும் அறிமுகப்படுத்திக் கொள்ள தயங்கவுமில்லை. அறிமுகத்தினூடே இருவரது தொலைபேசி இலக்கங்களும் இடம்மாறிக் கொண்டன. திடீரென்று ஒருநாள் கீதனின் அழைப்பு ராதாவை மீட்டிப் பார்த்தது. ராதாவைப் பொறுத்தவரை தனது குடும்பத்தைப் பார்க்கவேண்டும்ää தகப்பன் இல்லாத தன் குடும்பத்தை அவளே பராமரிக்கவேண்டும்ää தனது இரு சகோதரிகளையும் தானே படிக்கவைத்து கரைசேர்க்க வேண்டும் என்றொரு மாபெரும் பொறுப்பு. அவள் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையைத் தொடர்ந்த மூன்று மாதங்களுக்குள்ளேயே தலைமீது சுமத்தப்பட்டது. இருந்தும் அவள் இதை ஒரு சுமையாகக் கருதாதுää ஒரு சுகமாகவே கருதினாள். அதற்காக தன் ஆசாபாசங்கள்ää கனவுகள்ää எதிர்கால இலட்சியங்கள் அனைத்தையும் துச்சமாக மதித்து அவற்றை ஒரு மூலைக்குள் அடைத்துவிட்டாள். தனது தந்தையின் நண்பனான அருணின் அலுவலகத்திலேயே அவளுக்கு கௌரவமானதொரு தொழிலும் கிடைத்துää அதற்கேற்றாற்போல் சம்பளமும் வழங்கப்பட்டது. அப்பாவின் நண்பனான அருண் ராதாவை ஒரு ஊழியராகப் பார்க்காதுää அவளை தன் சொந்த மகளாகவே கருதினார். ராதாவின் வாழ்க்கை அந்த அலுவலகத்திலேயே தொடர ஆரம்பித்து இன்றுடன் ஐந்து வருடங்களையும் தாண்டிவிட்டது. ஐந்து வருடங்களுக்குள் அந்த அலுவலகத்திற்குள் வலைப்பின்னல்களை தயாரித்துக் கொள்வதற்காக எத்தனையோ இளைஞர்கள் வந்து செல்வார்கள். ஆனால் ராதாவிடமிருந்து அலுவலக வேலையைத் தவிர வேறு எந்தவிதமான வார்த்தைகளும் வெளியே வருவதில்லை. ஆனால் கீதனிடம் தொலைபேசி இலக்கத்தை மாத்திரமே மாற்றிக் கொண்டதாக எண்ணிக்கொண்ட ராதாவின் உள்ளத்தில் கீதனின் அழைப்பு அவளை தடுமாறச் செய்தது. சுகம் விசாரிப்புக்களுடன் ஆரம்பித்த தொடர்பு இரண்டு மணித்தியாலங்களையும் தாண்டி தொடர்ந்தது. ராதாவின் குடும்ப விபரங்கள் அனைத்தையும் அறிந்து கொண்ட கீதன்ää அவள் வாழ்வை மாற்றவேண்டும்ää அவளுக்குள் ஒழிந்திருக்கும் ஆசைகளை வெளிக் கொணரவேண்டும் என்பதில் மிகவும் ஆர்வம் கொண்டான். கீதனின் வார்த்தைகளில் இருந்த அறிவுரைகள் ராதாவின் உள்ளத்தையும் கலைக்காமல் இல்லை. கல்நெஞ்சம் கொண்ட ராதாவின் மனம் கீதனின் அறிவுரைகளினாலும்ää வாழ்க்கையின் யதார்த்தத்தை உணர்த்திய விதத்திலும் உடைய ஆரம்பித்தது. சிதறிய அந்த உள்ளம் கீதனிடமே சரணடையுமென்று ராதாகூட நினைக்கவில்லை. காலங்கள் கடந்த வேகத்திலேயே கீதன் - ராதாவின் தொடர்பும் வேகமடைந்தது. நட்பாக ஆரம்பித்த உறவு காதலாக மாறுவதற்கு சொற்ப காலங்களே தேவைப்பட்டது. ராதாவைப் பொறுத்தவரை வாழ்க்கை என்பது வெறும் வேஷம் என்றிருந்த தனக்குள்ää புது வசந்தத்தை ஏற்படுத்தியதுää ஏன் புது வாழ்வையே கொடுத்தது கீதன்தான் என்றும்ää தன் வாழ்வையே மாற்றித் தந்த கீதனுக்காக தன் உயிரையே விட்டுக் கொடுக்கவும் தயங்கமாட்டேன் என்றும் உறுதியான எண்ணம் தோன்றியது மட்டுமல்லாமல் காலப் போக்கில் அது அவள் கடமையாகவும் மாறியது. கீதன் ராதாவைச் சந்திப்பதற்கு முன்னர் வர்ஷா என்றொரு பெண்ணை காதலித்ததும்ää முதலில் கீதனின் காதலை ஏற்க மறுத்த வர்ஷாää அவளது சுய தேவைக்காக கீதனின் காதலை பயன்படுத்திக் கொண்டதும்ää பிறகு வர்ஷா வேறொருவருடன் காதல் மழையில் நனைத்து கொண்டிருப்பதை கீதன் நேரடியாகக் காண நேரிட்டதும்ää பிறகு கீதன் காதலில் நொந்து போன வேதனையோடு தனது வாழ்வைக் கழித்துவருவதும் ராதாவிற்குத் தெரியாமல் இல்லை. கீதன் ராதாவிடம் தன் வாழ்க்கையில் நடந்த அனைத்து விடயங்களையும் பகிர்ந்து கொண்டபோது அவன் முதல் காதலைப் பற்றி சொல்லாமலா இருப்பான். வர்ஷாவின் போலியான காதலில் நனைந்து தோற்றுப் போன கீதனால் பெண்கள் மீதிருந்த நம்பிக்கைää மரியாதை அனைத்தும் அற்றுப்போயிருந்தது. இருந்தும் ராதாவின் பணிவான நடத்தை கீதனை மாற்றத்தான் செய்தது. கீதன் ராதாவிடம் அடிக்கடி கூறுவான்ää ~~கடைசியா நான் அவளை சந்திச்ச நேரம்ää ~என் மீது உனக்கு எப்பயாவது காதல் வந்தா நீ என்ன செய்வே என்று கேட்டதற்கு அவ ~~நான் செத்தாலும்ää ஏன் நான் ஒரு பிச்சைக்காரியாப் போனாலும் கூட உன் மேல எனக்கு ஒருபோதும் காதல் ஏற்படாது என்று சொன்னா என்று எனக்குச் சொல்லி அழுவான். இதை தாங்க முடியாமல் ராதாவும் மனதுக்குள்ளேயே அழுவாள். வர்ஷா மீது கீதன் வைத்திருந்த அளப்பரிய காதல்ää காதல் தோல்வியால் ஏற்பட்ட விரக்தியில் கீதன் பட்ட வேதனைää அவன் நன்நடத்தை என்பன ராதாவை காலப்போக்கில் ~உயிருள்ள வரை இவன் உறவு எனக்கு வேண்டும்ää இவன்தான் என் உயிர் என்ற உறுதியை மனதுக்குள் விதைத்தது. இன்று அது ஆலமரமாகவும் வளர்ச்சியடைந்துவிட்டது. ராதா பலமுறை கீதனிடம் தன் காதலை வெளிப்படுத்த நினைத்தாலும் கூடää எங்கே அவன் ~இவளும் ஒரு சாதாரண பெண்தான் என்று நினைத்து தன்னை விட்டுப் பிரிந்திடுவானோ என்ற பயம் அவளுக்குள்ளே இருந்து அவளை வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது. கீதன் தன் வாழ்க்கையில் இனி எப்போதுமே காதல்ää திருமணம் என்பன கிடையவே கிடையாது என்ற உறுதியோடு வாழ்ந்துவருகின்றான். தூய்மையான உள்ளம் படைத்த கீதனை ராதா பலமுறை தனிமையில் சந்தித்திருந்தாலும் கூடää கீதனின் பார்வை அவள் கண்களை மாத்திரமே பார்த்துக் கதைக்கும். அவன் அவளை ஒரு நண்பியாக அல்லாமல் உறவுகளுக்குள் அடைக்கப்படாத உன்னதமான ஒரு உரிமையுடனேயே பழகுவான். அப்படிப்பட்ட கீதனிடம் ராதா தன் இதயத்தை இழந்துவிட்டதும்ää சொல்ல முடியாத அவள் காதலால் நாளுக்கு நாள் வேதனைகளுடன் வலம்வருவதும் தொடர்கதையானது. இன்று அவளுக்கு வீட்டில் வேறொருவருவனுடன் நிச்சயதர்த்தம் ஏற்பாடாகிவிட்டது. ஆனால் கீதனையே தன் எதிர்கால துணையாக எண்ணிக்கொண்டிருக்கும் அவளால் வேறொருவருடன் எப்படி வாழமுடியும். இனியும் கீதனிடம் காதலை மறைப்பதா? இல்லை வீட்டில் ஏற்பாடு செய்திருக்கும் முகம் தெரியா மாப்பிள்ளைக்குக் கழுத்தை நீட்டுவதா? என்ற கேள்விகளுக்கு பதில் கிடைக்காது ஆழ்ந்த சிந்தனையில் கிடக்கும் ராதாவின் நிலையோ நடுக்கடலில் தத்தளிக்கும் படகைப்போன்றதாய் மாறிவிட்டது. இந்தக் கேள்விகளுக்கு வெறும் கண்ணீர் மாத்திரமே பதிலாகக் கிடைக்கின்றது. (யாவும் கற்பனை)- ஹிமாயா ஹமீட்ää கொழும்பு-12.

2 comments: