Tuesday, October 27, 2009

வாழ்வின் யதார்த்தம்!


வாழ்வின் ஒவ்வொரு அத்தியாயமும்

வாசிக்கப்படும் முன்பே கிழித்தெறியப்படும்

கொடுமை நம் வாழ்வில்!
தமிழனோ, சிங்களவனோ – அன்றி முஸ்லிமோ,

கிறிஸ்தியரோ மனித இறப்புக்கள்

குவிக்கப்படும் காலம் நம் காலம்!
தமிழீழம் வேண்டி நடத்தப்படும்

யுத்தத்தில் திரிகள் மட்டும்

கருகிக் கொண்டிருக்கின்றன.

ஏன் பிரிவுத் துயர் தாளாது ஆங்காங்கே

கூரைகளும் கருகிக் கொண்டிருக்கின்றன.

இதுதான் நம் வாழ்வின் யதார்த்தம்!
நாம் அனுப்பி வைத்த தலைவர்கள்

இன்று பஞ்சு மெத்தையில்

சுகமாகத் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்!

ஆனால் நாமோ ஒருவேளை

உணவிற்கும் வழியின்றி – உறங்கவும் இடமின்றி

வாழ்கின்றோம். இதுதான் நம் வாழ்வின் யதார்த்தம்!
வடக்கிலும், தெற்கிலும், கிழக்கிலும்,

குழந்தைகள் பசிப் பட்டினியால்

வாடி வதங்கி அனாதரவாகக் கிடக்க

தமிழீழம் ஏது தமிழீழம்!!
இனவெறி

தலைவிரித்தாடும்இப்பூமியில்

வேறிபிடித்த நாயைச் சுட்டு

வீழ்த்துவது போல்மனித உயிர்களைச் சுட்டு

வீழ்த்துவது நம்வாழ்வின் யதார்த்தம்!
மாற்றங்கள் ஏற்படுமா?

எமக்குத் தான் விடிவுகள் கிடைக்குமா என

ஒவ்வொரு நாளும் ஏங்கித் தவிப்பது

நம்வாழ்வின் யதார்த்தம்! இனிவரும்

சந்ததியினருக்காவது எமது

வாழ்வின் யதார்த்தம் அழிக்கப்பட்டு

மாற்றங்களுடன் கூடிய காலங்கள் கிடைக்குமா!

-ஹிமாயா ஹமீட், கொழும்பு-12.

No comments:

Post a Comment