Tuesday, December 15, 2009

"மக்கள் விடுதலை இராணுவம்"


முஸ்லிம்களே அழிவுகள் நமக்கு வேண்டாம்...
தனிநாட்டுக் கோரிக்கையென்ற நிலையோடு கிழக்கு மாகாணத்திலிருந்து மீண்டுமொரு அமைப்பு இயங்கத் தொடங்கியுள்ளதாகவும்ää அதற்கு ~~மக்கள் விடுதலை இராணுவம்|| என்னும் பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும்ää இவ்வமைப்பிற்கு பத்துப் பேர் தலைமைத் தாங்குவதாகவும் அண்மைய செய்திகள் தெரிவிக்கின்றன.
பயங்கரவாதம் நாட்டிலிருந்து முற்றாக நீக்கப்பட்டு தற்போது இராணுவ பாதுகாப்போடு நாடு அமைதியான முறையில் சென்றுகொண்டிருக்கும் இத்தருணத்தில் இந்த புதிய அமைப்பின் தோற்றம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது என்பதை விடவும்ää நாடு சமாதானத்தை எட்டியதிலிருந்து தமக்குப் பிரசுரிக்க செய்திகள் கிடைக்காது அலைந்து திரிந்த ஒரு சில ஊடகவியலாளர்களுக்கும்ää பத்தி எழுத்தாளர்களுக்கும் ~~வெறும் வாய்க்கு அவல் கிடைத்தாற்போல்|| அமைந்துவிட்டது எனலாம்.
தம் கரங்களால் எப்படியெல்லாம் வர்ணனையிட முடியுமோ அப்படியெல்லாம் வர்ணனையிடுவதும்ää அவர்கள் மனங்களில் தோன்றும் கற்பனைகளை உண்மைக் கதைகளாகவே உருவாக்கி அதற்கு பல நிறங்களைத் தீட்டி அழகுபடுத்தி உண்மைக்குப் புறம்பான கருத்துக்களைக் கூட அப்பமட்டமான உண்மையாகவே எழுதும் வல்லமை கொண்டவர்கள் இந்த பத்தி எழுத்தாளர்கள்.
அதிலும் குறிப்பாக அரசியல் ஆய்வுக் கட்டுரைகளை எழுதிவதில் தேர்ச்சி பெற்றவர்களை விடää தமக்கும் ஊடகத்துறையில் ஒரு பெயர் வேண்டும் என்ற நிலைப்பாட்டோடு வாய்ப்புத் தேடி அலைந்து திரியும் ஒரு சில பத்தி எழுத்தாளர்களுக்கு இது ஒரு அரிய சந்தர்ப்பமாக அமைந்துவிட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
~~நேற்று முளைத்த காலாணாய்|| உருவாகியிருக்கும் மேற்படி ~~மக்கள் விடுதலை இராணுவம்|| என்ற அமைப்பானது கிழக்குக் காட்டுப் பகுதியில் இயங்கிவருவதாகவும்ää அந்த அமைப்பில் தற்போது குறைந்தது 300பேர் வரை தாக்குதலுக்குத் தயாராக இருப்பதாகவும்ää மேலும் 16 தொடக்கம் 18 வயதுக்கிடைப்பட்டவர்கள் இந்த அமைப்பில் இணைத்துக் கொள்ளப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் கிழக்குக் காடுகளில் செயற்பட்டுவரும் இந்த அமைப்பின் தலைவர்களை கடல் வழியாக படகுகளில் வெளிநாட்டவர்கள் மாத்திரம் சென்று சந்திப்பதாகவும்ää அவர்களுக்கு தமது போராட்டம் மற்றும் இயக்கச் செயற்பாடுகள் பற்றிய கருத்துக்களைக் கூறி அவர்களது உதவிகளையும் பெற்றுக் கொள்வதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன் இந்த அமைப்பிற்கு பாலஸ்தீனம் - கியூபா போன்ற நாடுகளிலுள்ள புரட்சி இயக்கங்களுடன் நேரடித் தொடர்புகள் இருப்பதாகவும்ää எனவே இவ்வமைப்பின் செயற்பாடுகள் அடுத்த வருட இறுதிக்குள் வடக்கு - கிழக்கு முழுவதிலும் ஆரம்பிக்கப்பட்டுவிடுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வமைப்பின் தாக்குதல் இலக்கானது இலங்கை அரசின் கேந்திர நிலையங்களும்ää படைகளும் மற்றும் கருணா தலைமையிலான அணியினருமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுவதுடன்ää இது ஒரு தனிநாட்டுக்கான போராட்டம்தான். ஆனால் புலிகளின் போராட்டத்திலிருந்து வேறுபட்டது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இத்தகவல் எந்தவகையில் உண்மையானது என்பது உண்மையில் இந்தக் கட்டுரையை எழுதும் வரை புலப்படவில்லை. ஆனாலும் இந்தக் கட்டுரையை தொடர்ந்து எழுது வேண்டிய காரணமும்ää கால அவசியமும் தேவையானதொன்றே.
கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை அங்கே முஸ்லிம்கள் அதிகமாக வாழக்கூடிய பிரதேசம் என்று கூறலாம். ஆனாலும் பயங்கரவாதிகளால் அவர்கள் விரட்டியடிக்கப்பட்ட காலத்திலும் சரிää அதே பயங்கரவாதிகளிடமிருந்து கிழக்கு மாகாணத்தை அரசாங்கம் மீட்டுள்ள நிலையிலும் சரிää முஸ்லிம்கள் அப்பகுதியில் தமக்கான உரிமையையோää தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான நியாயத்தையோ கேட்டு நிற்கவேயில்லை. அன்று முதல் இன்று வரை அவர்கள் அமைதியாகவே அவர்களது வழமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
ஆனாலும் அண்மையில் அமைக்கப்பட்டுள்ள இந்த அமைப்பிற்கு யார் பொறுப்புக் கூறுவது என்ற கேள்விக்குப் பதில் பல கேள்விகளை முஸ்லிம் மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளமை வேதனைக்குரியதே.
ஏனெனில் இந்த அமைப்பைப் பற்றிய தகவல்கள் வெளியானதும் தமிழ் தலைமைகளிடமிருந்தும்ää ஒரு சில ஊடகங்களிடமிருந்தும் வெளியான செய்திகள் இவை.
~~தனிநாட்டுக் கோரிக்கைக் கேட்டுப் போராடிய புலிகள்ää பயங்கரவாதிகளாக மாறி தமது அடாவடித்தனங்களை கட்டவிழ்த்துவிட்டதால் அவர்களே அழிந்துவிட்டார்கள். எனவே மீண்டுமொரு தனிநாட்டுக் கோரிக்கைக்கான எதிர்பார்ப்பு தமிழ் மக்கள் மத்தியில் ஒருபோதும் ஏற்படப்போவதில்லை. கடந்த 30 வருடங்களாக நடந்த தமிழீழப் போராட்டம் அழிவையே சாதித்தது. இதன் மூலம் தமிழ் மக்கள் இழந்தது கொஞ்ச நெஞ்சமல்ல. அவர்களின் இழப்புக்களை எதைக் கொண்டும் ஈடு செய்ய முடியாது. அவர்கள் இன்னமும் சரியானதொரு நிலைக்கு வராத நிலையில்ää மீண்டுமொரு போராட்டத்திற்குத் தயாராக மாட்டார்கள்.|| இப்படியான கருத்துக்கள் தொடர்ந்து கொண்டே சென்றது.
அப்படியானால் இந்த அமைப்பு யாரால் உருவாக்கப்பட்டதுää இது யாருக்குரிய அமைப்பு. இதன் நோக்கமென்ன? இந்தக் கேள்விகளையும்ää மேலே குறிப்பிட்ட கருத்துக்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போதுää எந்தவிதத்திலும் தமக்கான உரிமையையோää இழப்பீடுகளையோ பெற்றுக் கொள்ளத் துணியாது இதுவரை காலமும் அமைதியாக இருந்த முஸ்லிம் மக்களையே தொட்டுச் செல்கின்றது.
இவ்வாறானதொரு நிலை முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்டும் கூடää அவர்களைப் பாதுகாக்க வேண்டிய முஸ்லிம் தலைமைகள் ஏன் இன்னும் மௌனம் சாதிக்கின்றன? அவர்களுக்குக் கட்சி விட்டு கட்சி தாவும் சுயஇலாப அரசியலில் ஈடுபடவே நேரம் போதாது. இந்த நிலையில் அவர்கள் எங்கே முஸ்லிம் மக்களைப் பற்றிச் சிந்திப்பது, அவர்களுக்காகப் பேசுவது?
உண்மையில் முஸ்லிம் மக்கள் மத்தியில் இருக்கும் முஸ்லிம் தலைமைத்துவமானது வெறுமனே வாய்ப்பேச்சுக்காக மாத்திரமே தவிர, இதுவரை மக்களுக்கான செயற்பாடுகளில் துளியளவும் ஈடுபட்டார்களா தெரியவில்லை.
எனவே இந்தச் சந்தர்ப்பத்தில் முஸ்லிம் மக்களுக்கு சொல்லநினைப்பது இதுதான், நாம் இதுவரைக் காலமும் எந்தவித ஆசாபாசங்களுமின்றி, அமைதியான முறையில் எப்படி வாழ்கின்றோ அப்படியே வாழ்வதுதான் சிறந்தது.
உங்களை நீங்கள் வளர்த்துக் கொள்ள விரும்புகின்றீர்கலேயானால், உங்களுக்கான சரியானதொரு அரசியல் தலைமையைத் தேர்வு செய்து அதனூடாக நாட்டின் தலைமையிடமிருந்து ஜனநாயக வழிமுறையில் பெற்றுக் கொள்ளத் துணியவேண்டும்.
ஆர்ப்பாட்டம்ää போராட்டம், கொலை, கொள்ளை இவ்வாறான கேடான செயல்கள் எதனையும் இஸ்லாமும் விரும்பவில்லை, முஸ்லிம் மக்களும் விரும்புவதில்லை என்ற கருத்தை முழு மனதோடு ஏற்றுக் கொண்டீர்களேயானால், விருப்பங்கள், உரிமைகள் இல்லாத வாழ்வானாலும், நிம்மதியான வாழ்வோடு தொடர்ந்தும் பயணிக்கலாம்...
இத்தகவல் எந்தவகையில் உண்மையானது என்பது உண்மையில் இந்தக் கட்டுரையை எழுதும் வரை புலப்படவில்லை. ஆனாலும் இந்தக் கட்டுரையை தொடர்ந்து எழுது வேண்டிய காரணமும், கால அவசியமும் தேவையானதொன்றே.
-எஸ்.ஷபா.

No comments:

Post a Comment