
அந்த மாலை வேளையில்
உன் அருமையான - அழகான
அமைதியான முகம் கண்டு
திகைத்து நின்ற வேளை -
ஓரப் புன்னகையால் என்னை
வருடி விட்டுச் சென்ற
அந்த நிமிடத்தை
நினைத்தவாறே ஓடும் பேரூந்திலும்
ஏறுகின்றேன்..!
உன்னை விட்டு தூரமாகிவிட்ட
நிலையிலும் - அந்த நிமிடம்
மாத்திரம் இன்றும் அதே
ஸ்பரிசத்துடன் தொடர்வதால்
என் நிலை மறந்து
ஓடாத பேரூந்திலும்
உட்கார்ந்துவிடுகின்றேன்..!
செம்மண்ணில் கலந்திட்ட
மழைநீராய் எனக்குள்
நீயும் நுழைந்திட்டதால்
துன்பங்கள் கூட
இன்ப ராகங்களாகவே
எனக்குள் நுழைகின்றது!
எழுத்துக்களால்
சொல்லால் - அறிந்திருந்த
காதல் இன்று
அனுபவமாய் - கவிதையாய்
எனக்குள் பரந்துக் கிடப்பதற்கும்
காரணம் நீதானே!
இரசாயன மாற்றமா?
வயதின் கோளாறா - அன்றி
மனநோயா? - அனுமானிக்க
முடியவில்லை - ஆனால்
அனுபவிக்க முடிகின்றது..!
யாருக்குத் தெரியும்
எனக்கும் காதல் வருமென்று - ஆம்
நான் கூட நினைக்கவில்லை
உன்னைக் காணும்வரை - எனக்கும்
காதல் வருமென்று!
ஏராளமாய் உன்நினைவுகள்
எனக்குள் தேங்கிக் கிடப்பதால்
தானோ ஏன்னவோ - ஓடும் பேரூந்தில்
ஏறும் நானே - ஓடாத பேரூந்திலும்
உட்கார்ந்துவிடுகின்றேன்..!
-ஹிமாயா ஹமீட், கொழும்பு-12.
No comments:
Post a Comment