Friday, December 11, 2009

ஐந்து தலைப்புக்களுக்கான கவிதைகள்!

காதல் அகராதி!
உன் பெயரால்
நிரம்பி வழிகின்றது
என் காதல் அகராதி!

செவ்வாய் தோஷம்!
செவ்வாய் தோஷத்தில்
என் காதலும் பிறந்ததால்
செயலற்றுப் பொய்விட்டது - என்னைப்
போலவே!

உன் பார்வையில் நான்!
உதவிக்கரம்
நீட்டுவதில் - மற்றவர்களுக்கு
அட்சயப் பாத்திரமாய்த்
திகழும் நான்
உன் பார்வையில் மாத்திரம்
வெறும் பிச்சைக்காரியாத்
தெரிவதுதான் ஏனோ..!

பதியாத சுவடுகள்!
இலை மறை காயாய்
வாழ்ந்துக் கொண்டிருக்கும்
நம் காதலட - அறுதிவரை
பதியாத சுவடுகளாகவே
மறைந்திடுமோ?!

உன் கண்களைப் பார்த்த நிமிடம்!
கருவானிலே தெறிந்த
நட்சத்திரமாய் நின்ற
உன் கண்களைப் பார்த்த முதல்
நிமிடமே - அதனை கம்பீரமாகத்
தாங்கி நின்ற உன்
நெற்றிப் பரப்பில் தயங்காது
நானும் பரவியதை என்றுதான்
நீயும் உணர்ந்து கொள்வாயோ..!

No comments:

Post a Comment