Friday, December 11, 2009

ஐந்து தலைப்புக்களையும் சுமந்து ஒற்றைக் கவிதையாய்...


நினைவுகள்!
உன் கண்களைப் பார்த்த நிமிடமே
மௌனம் எனக்கு தாய்மொழியானது!
வரலாறு படைக்கப் பிறந்தவள் - இன்று
வற்றிப்போன சமுத்திரமாய்
மாறியதுதான் ஏனோ!

சொற்களுக்குச் சுயம்வரம் Nடித
கவி வடிக்கக் கனா கண்ட
என் உள்ளமோ - உன்னைக்
கண்டதும் காதல் அகராதியையே
எனக்குள் உருவாக்கியதுதான் ஏனோ!

உயிரைக் கெடுத்தேனும்
உனை நான் பெற்றிடுவேன் - என
உன் பின்னால் நடைப்போட்ட
என் பயணம் - பதியப்படாத
சுவடுகளாய் இன்னும் தொடர்வதுதான் ஏனோ!

இத்தனை கேள்விகளுக்கும்
கண்ணீரோடு விடை தேடிவேளை - உன்
பார்வையில் நானோர்
செவ்வாய் தோஷக்காரியாய்
பதியப்பட்டது தெரிந்தது!!

இருந்தும் கூட
என் கனவுகளுக்கு உயிர் கொடுத்து
உன் நினைவுகளோடு வாழ்ந்துக்
கொண்டிருக்கின்றேன் - கிடைசி
தருணத்தினாலாவது உன் மூச்சுக்காற்றை
சுவாசித்தவளாய் மரணிப்பேன்
என்ற எதிர்பார்ப்புக்களோடு!

No comments:

Post a Comment