நீ தந்த பரிசு!
சொர்க்கத்துச் சுகங்களையெல்லாம்
ஒன்று சேர்த்து - ஒற்றை முத்தமாய்
என் பிறந்தநாளன்று பரிசாய்த் தந்தவனே!
ஏழேழு ஜென்மம்
எடுத்தாலும் - உன்
காலடியில் கிடக்கும்
பாக்கியத்தை
மாத்திரம்
தரமறுப்பது தான் ஏனோ!
புருவம்!
கன்னியவள் கண்களுக்கு
அழகு சேர்க்கும்
பொறுப்பை
புருவம் தாங்குகின்றது!
உன்னவள் வாழ்விற்கு
அழகு சேர்க்கும்
பொறுப்பை - உன்
இரு கரங்களுமல்லவா
தாங்குகின்றது!
புதுக்கவிதை!
ஆயிரம் தடவைகள்
கவிதை எழுத
முயற்சித்தும்
அத்தனையும்
தோல்வியில்
முடிந்தது!
ஆனால் சில
நாட்களாகவே - எனக்குள்ளும்
புதுக்கவிதைகள்
பிறக்கின்றன - உன்
பெயரைத் தலைப்பாய்ச்
சுமந்தவாறு...!
சிலந்தி!
காதல் என்றோர்
வலை விரித்து
கனவுகள் பல
சுமக்க வைத்தவனே!
சிலந்தி வலையில் சிக்கிய
பட்டாம்பூச்சியாய் இன்று நான்
உனக்குள்ளே சிறைப்பட்டுக் கிடக்கின்றேன்!
என்றோ ஓர்நாள் - உன்
மனைவியாய் இவ்வுலகில் வலம்வருவேன்
என்ற எதிர்பார்ப்புக்களோடு..!!
தத்தளிக்கும் ஓடம்!
பாசம் ஓர்
வேஷம் என்றெண்ணி
பதினாறு வருடங்கள் கழித்த
என் வாழ்வை - பத்தே நிமிடத்தில்
மாற்றியவன் - காதல்
என்னும் பூப்பந்தலில்
தனியே தவிக்க விட்டுச் சென்றதுதான் ஏனோ!
காதல் என்ற கானல் நீரில்
தத்தளிக்கும் ஓடமாய்
இன்று நான் மீட்பார்
உதவி நாடி நிற்பதை
அறிந்தும் அறியாததாய்ச்
செல்வதும்தான் ஏனோ..!
-ஹிமாயா ஹமீட்,
கொழும்பு-12.
No comments:
Post a Comment