
அன்று அமுதாய்
இனித்திட்ட நம்
காதல் - இன்று
விஷமானது தான் ஏனோ!
காதல் காயங்களை
சுமக்க முடியாது
நொந்துப் போன
என் இதயம்
வேதனையில்
சிக்கிச் சிதறவே
வாழவழியின்றி
விலாசமில்லா வீதியை
நாடிச் சென்றது...!
காலங்கள் பல
கடந்தும் உன்
ஞாபகங்களை மறக்க முடியாது
மரணமும்
என்னைத் தழுவியது!
மண்ணறைக்குள்
நான் கிடந்த போது
என்னைப் போலவே
காதல் தோல்வியால்
பல ஆவிகளின் முணுங்கல்கள்
காதுகளைத் தொட்டது!
அப்போதுதான் புரிந்தது
அழுதத்தையும்ää விஷத்தையும்
இரண்டரக் கலந்து
இறைவன் படைத்த
~காதல்| என்னும் படைப்பு
மரணத்தின் பின்னும் மாறாத
வடுக்களைத் தான் சுமக்குமென்று..!!
-ஹிமாயா ஹமீட், கொழும்பு-12.
No comments:
Post a Comment