


சொத்து சுகம் வேண்டாம் - உன்
ஓலை குடிசை போதும்!
உற்றார் - உறவுகள் வேண்டாம்
உலக உறவுகiயெல்லாம் ஒன்றிணைத்து
உன் ஒற்றை உறவுபோதும்!!
ஏழேழு ஜென்மம் உன்னுடன்
வாழும் உரிமை வேண்டாம்
எட்டு நிமிடம் உன் மனைவியாய்
வாழும் உரிமை கொடுத்திடு - என்று
கன்னியவள் கண்ணீர்
பெறுக - தன் காதலனின்
காலடியில் கிடக்கிறாள் - பாவம்
அவன் ஓர் செவிடன்
என்பது அறியாதவளாய்..!
-ஹிமாயா ஹமீட், கொழும்பு-12.
No comments:
Post a Comment