Friday, November 20, 2009

திருஷ்டிப் பொட்டு!


வில்லுடைத்து வீரம்
காண்பித்த - இராமனாய்!
அன்னையின் ஆணைக்காய்
காடாளச் சென்றுவிட்ட
இராமனாய் - எனக்கு
நீ தோன்றியவேளை - உன்
நெற்றியில் நான் வைத்த
திருஷ்டிப் பொட்டின்
அடையாளம் மங்குவதற்குள்
கட்டிய மனைவியைத் தீக்குளிக்க
வைத்த கயவனாய்
நீ மாறிவிட்டாயே..!!
-ஹிமாயா ஹமீட், கொழும்பு-12.

No comments:

Post a Comment