Friday, December 18, 2009

'சுவிங்கம்' வெடித்து மாணவர் சாவு

உக்ரைன் நாட்டைச் சேர்ந்த கொனோடாப் நகரைச் சேர்ந்தவர் பெலிவ் (வயது 20). கல்லூரி மாணவர். வேதியியல் துறையில் படித்து வந்தார். இவருக்கு அடிக்கடி சுவிங்கம் சாப்பிடும் பழக்கம் உண்டு.

சுவிங்கத்தை சிட்ரிக் ஆசிட்டில் தொட்டு சாப்பி டும் பழக்கத்தை கொண்டிருந்தார்.

சம்பவத்தன்று சுவிங் கத்தை சிட்ரிக் ஆசிட்டில் தொடுவதற்கு பதிலாக, வெடிக்கும் திறன் கொண்ட ரசாயன கலவையில் தவறுதலாக தொட்டு சாப்பிட்டார்.

கடித்து சாப்பிடும்போது சுவிங்கம் திடீரென வாயுக்குள்ளேயே வெடித்தது. இதில் முகம் சிதறி அந்த இடத்திலேயே மாணவர் பலியானார்.

No comments:

Post a Comment