Thursday, May 6, 2010

"விளக்கும், விட்டிலும்…"


ஒவ்வொரு இரவிலும் விட்டிலும், விளக்கும் ஒன்றை ஒன்று சந்தித்துக் கொள்வதும், விளக்கைப் பார்த்து விட்டில் எதையோ சொல்லத் துணிவதும், அதை எதிர்த்து காற்று தன் பக்கம் விளக்கின் ஒளியை இழுத்துக் கொள்வதும் வழமையான நிகழ்வாகவே இருக்கின்றது.

இப்படியிருக்கையில், 'இன்று எப்படியாவது இந்த விடயத்தை விளக்கிடம் கூறி' அதற்கான பதிலைப் பெற்றுக் கொள்வேன்'' என்ற முடிவோடும், துணிச்சலோடும் விட்டில் விளக்கைச் சந்திக்கின்றது….

விட்டில் :- ஹாய்…. எப்படி இருக்கின்றாய்…?
விளக்கு:- எனக்கென்ன, நான் நன்றாகவே இருக்கின்றேன். நான் நளமாய் இருந்தால் தானே, என்னை நம்பியுறங்கும் மக்களும், நீயும் நிம்மதியாய் இருப்பீர்கள்…

விட்டில்:- ம்ம்ம்…. போதும்.. போதும்… நான் ஒன்றும் உன் சுயசரிதம் கேட்க வரவில்லை. உன்னிடம் ஒரு விடயத்தைக் கூறி அதற்கு சரியான பதிலைப் பெற்றுக் கொள்ள நினைக்கின்றேன்…
விளக்கு:- காலம் காலமாக நீ என்னை நோக்கிச் சொல்ல வரும் விடயம் என்ன என்பது எனக்குத் தெரியாமலா போகும்? நீ கேட்கும் கேள்விக்கு என் மனதைத் தொட்டு பதில் சொன்னால்… என்னை நம்பியிருப்பவர்கள் தான் பாதிக்கப்படுவார்கள்? தயவு செய்து என் மனதைக் கெடுக்காமல் உன் வேலையை மாத்திரம் நீ செய்…..

விட்டில் :- போதும்… போதும் நிறுத்து உன் வெட்டிப் பேச்சை. நீ நினைப்பதைப் போல் காலம் காலமாய் உன்னை சுற்றிவரவில்லை. ஆதிகாலம் தொட்டு எனக்குள் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு விடயத்திற்கு பதில் தேடி தான் உன்னிடம் வந்திருக்கின்றேன்…
விளக்கு:- ஓ… நான் தான் அவசரப்பட்டுக் கதைத்துவிட்டேன். சரி நீ கேட்க வந்த விடயத்தை சுற்றிவளைக்காமல் நேரடியாகவே கேட்டுவிடு. உன்னைப் போல் வேலை இல்லாமலா நான் இருக்கின்றேன்….

விட்டில்:- நான் ஒன்றும் வேலை இல்லாமல் இருக்கவில்லை. பகல் முழுவதும் எனது வேலைகளைச் செய்துவிட்டு இரவிலும் சளைக்காமல் வேலை செய்து கொண்டிருக்கின்றேன். ஆனால் நீயோ பகலில் முழுதும் உறங்கிவிட்டு, இரவில் மாத்திரமே உன் கடமையை செய்கின்றாய். அப்படிப் பார்த்தால் நான்தான் உன்னை விடச் சிறந்தவன்.
விளக்கு:- யார் சிறந்தவன் என்ற கேள்விக்கு பதில் சொல்லும் நிலையில் நான் இல்லை. இருந்தும் சுருக்கமாகச் சொல்கிறேன். இருட்டில் இருக்கும் மக்கள் என்னை நம்புகிறார்கள். அவர்களின் நம்பிக்கை வீண் போகாதுää நானும் என்னை அவர்களுக்காக அர்ப்பணிக்கிறேன். ஆனால் நீயோ உனக்கே உனக்கான பணிகளைக் கூட மக்களை துன்புறுத்தியவாறே செய்கின்றாய். இப்படி நோக்கும் போது நான் தான் உன்னை விடச் சிறந்தவன்…

விட்டில் :- சரி விடு… யார் சிறந்தவன் என்ற கேள்விக்கான விடையைத் தேடி உன்னிடம் வரவில்லை நான். மாறாக, இந்த மரணம்….
விளக்கு:- மரணமா…?

விட்டில்:- ஆமாம் அதேதான். மனிதர்கள் அதிகம் இறப்பது இரவில்தான். இந்த விஞ்ஞான யுகத்தில் எத்தனை எத்தனையோ சாதனைகள் படைத்தாலும்ää அத்தனை மக்களாலும் இந்த மரணத்தைப் பற்றிய விடயங்களை சரியாகக் கணிக்க முடியவில்லை. எனவே தான் இது இவ்வாறு நேர்கின்றதுää எப்போது நேர்கின்றது, முக்கியமாக அதனை எப்படித் தடுத்து நிறுத்தலாம்? போன்ற கேள்விகளுக்கு பதில் தேடுவதற்காக உனது உதவியை நாடுகின்றேன்….
விளக்கு:- அது சரி... உன் தேவையைக் கூட என்னிடம் அதிகாரமாய்த் தான் கேட்பாயோ? உன்னைச் சொல்லிக் குற்றமில்லை. உனக்கு இறக்கையைக் கொடுத்தானே அவனைத் தான் சொல்லணும்…

விட்டில்:- நீர் யாரைச் சொன்னாலும் பரவாயில்லை. எனக்கு முதலில் பதிலைக் கூறு.
விளக்கு:- அது சரி…. இந்தக் கேள்விக்கு பதில் என்னால் கூறமுடியாது…

விட்டில் :- உன்னால் கூறமுடியாதா? உன்னால் மாத்திரமே இந்தக் கேள்விக்கு பதில் கூறமுடியும். ஏனெனில் அதிக மரணங்களை தயங்காமல் பார்ப்பதும்ää மரணத்தை பறிப்பதற்கு உதவி புரிவதும் நீயல்லவே….
விளக்கு:- நிறுத்துகின்றாயா உன் சொற்பொழிவை. இதே கேள்விக்கு விடை தெரியாமல் ஆண்டாண்டு காலமாக நானும் தட்டுத் தடுமாறுகின்றேன். உயிரைப் பெற வருபவனுக்கு ஒளியைக் கொடுக்கும் எனக்கே இவ்வளவு காலமாய் விடை காணமுடியவில்லை. அதை பறிக்கும் விதத்தை சற்றேனும் காணாத உன்னாலும், உன் மக்களாலும் எப்படித்தான் கண்டுபிடிக்கமுடியும்? சும்மா அர்த்தமற்ற வேலைகளை செய்வதை நீயும், உன் மக்களும் நிறுத்தி விட்டு எதையாவது உருப்படியாக செய்வதற்கு முயலுங்கள்….

விட்டில் :- சரி, சரி உன்னிடம் அறிவுரை கேட்டு நான் இன்று வரவில்லை. விட்டால் உன் புராணத்தை அப்படியே என்னிடம் கொட்டிவிடுவாய் போலும்… நான் போகிறேன். ஆனால் நாளை வருவேன். உன்னிடம் ஒரு முக்கியமான விடயம் இருக்கின்றது. அதுவும் என் மனதில் இத்தனை காலமும் மறைத்து வைத்த விடயம் அது. நாளை எப்படியாவது அதை உன்னிடம் தெரிவிக்கின்றேன். ஓகே.. பாய்…

விளக்கு :- பாய்…பாய்…

No comments:

Post a Comment