
துளித் துளியாய்த்தூவிடும் மழைத் தூறல் போல் நீயும் உன் வார்த்தைகளை என்னுள் தூவிச் செல்கின்றாய்…
அந்தத் தூறல்கள்எனது இதயத்தை முற்றிலுமே நனைத்துவிட்டது தெரியாமல்…
கொஞ்ச நேரம் கொஞ்சிப் பேசுகின்றாய் - மிஞ்ச நேரம் கெஞ்ச வைக்கின்றாய்… சற்று நேரம் தாமதித்தாலும் துடித்திடுவேன் - என்று அறிந்தும் தொடர்பே கொள்ளாது என்னைவாட்டி வதைக்கின்றாய்…
ஏன் இப்படியொரு காதல் நாடகத்தை ஆரங்கேற்றுகின்றாய் - என்று கேட்டால் - உன் ஒரு துளி புன்னகையால் என்னை சமாதானப் படுத்திவிடலாம் என்பதை மட்டும் நன்கு அறிந்தவனாய் மெல்லமாய் சிரிக்கின்றாய்…
மொத்தத்தில் புரியாத புதிரானவனாய் நடைபோடுகின்றாய் - என் இதயத்திற்குள்…
-ஹிமாயா ஹமீட், கொழும்பு-12.
No comments:
Post a Comment