Wednesday, October 28, 2009

தாலாட்டு..!



ஊரையே தாலாட்டிநித்திரையில் ஆழ்த்தியவெண்நிலவு கூடஇன்று எனக்குவஞ்சனை செய்கின்றது.நித்திரையின்றித்தவிக்கும் எனக்கு மாத்திரம் அது தாலாட்டுப்பாட மறுக்கின்றது.
காரணம் கேட்டேன்..!உன் காதலனை தனியே தவிக்க விட்ட உனக்கு மாத்திரம் எங்கிருந்து நித்திரை வருகின்றது – என்று அது என்னையே கேள்விகேட்கின்றது.
வஞ்சனை செய்யும் நிலவுக்கு எங்கே தெரியப் போகின்றது நான் உறங்கத் துடிப்பதே கனவிலாவது உன்னைச் சந்திக்கவேண்டும் என்பதற்காகத்தான் என்று..!!
புன்முறுவல் பூத்திடும் உன் பூவிதழ்களால்என் உதடுகளை ஒருமுறைதீண்டினால் போதும் – ஓராயிரம் காலம் நானும் வாழ்ந்திடஎனத் துடிக்கும் என் ஏக்கங்களை அந்த வஞ்சனை நிறைந்தகபட மனம் கொண்ட வெண்நிலவுக்கு எங்கே தெரியப் போகின்றது…!!


-ஹிமாயா ஹமீட், கொழும்பு-12.

No comments:

Post a Comment