
அவனைக் காணத் துடிக்கும் என் இதயத்தின் ஏக்கங்களை நிலவே அவனிடத்தில் சமர்ப்பித்துவிடு.
நித்தமும் அவனை நினைத்துவாடும் என் காதலின் ரணங்களை அவனிடத்தில் கொண்டு செல் - நிலவே!
அவனுடன் சொற்பொழிந்த வார்த்தைகளை நினைத்து நிம்மதியடையும் - நான் அவனைப் பிரிந்து வாடும் வேதனைகளை நிலவே அவனிடத்தில் கூறிவிடு..!!
அவனது ஞாபகங்கள் என்னை ஒவ்வொரு நிமிடமும்வாழவைத்துக் கொண்டிருக்கின்றதுஎன்பதை அவனுக்குத் தெரியப்படுத்து நிலவே..!!!
காதலில் தவிக்கும்நம்மிருவர் மத்தியிலும்மொத்தத்தில் - காதல் தூது செல் நிலவே..!!!
-ஹிமாயா ஹமீட், கொழும்பு-12.
No comments:
Post a Comment