Thursday, November 5, 2009

புரியாத உறவு..!


நட்பு என்னும் மேடை அமைத்துநாடகம் புரிகின்றாயே - உன்நளினப் புன்னகைஎன்னைக் கொல்லாமல் கொல்கின்றது - நீஎனக்குக் கிடைக்க மாட்டாய்எனத் தெரிந்தும் - உன்னைநாடத் துடிக்கின்றது - என் கவிதைகள் மட்டுமல்ல நானும்தான்..உறங்கும் இரவும் - உன்னால் உறக்கம் இன்றித் தவித்திடுமோ - என்றெண்ணும் போதுகண்ணீரும் மழையாகவே பொழிய ஆரம்பிக்கின்றது..ஒரு கணமாவது - உன் ஓரப் பார்வைக் கொண்டு - என்னை மாற்றிவிட நினைக்காதே!உறங்கிப் போன சில உண்மைகளுக்காக ஊனமாகிப் போகின்றேன்...!!நீ இல்லாத வாழ்வுஒரு நொடிப் பொழுதும்எனக்கு வேண்டாம் - என்றுத் தோன்றிட வைத்திடாதே.. - ஏனெனில் நமக்குள் பூத்திருப்பது நட்பென்னும்பூபாளம்..என் அன்பின் ரகசியத்தை உணர்ந்துவிடாதே.. - தப்பியும் உணர்ந்துவிட்டால் - அறுந்துவிடும்நம் நட்புடன்கூடிய சொர்க்கம்..!-ஹிமாயா ஹமீட், கொழும்பு-12.(அக்னி FM)

No comments:

Post a Comment