Monday, November 16, 2009

பீனிக்ஸ் நாங்கள்..!



என் இதயத் தோட்டத்தில் நட்டு வைத்த
ரோஜாவே - நீ
கொஞ்சிப் பேசிய நாட்களும்
கெஞ்சி அழுத இரவுகளும்
இன்னும் என் கண்களுக்குள்
காவியம் பாடுகின்றது...

சுதிசேரா ராகங்கள்
நாங்கள் - அறிந்தும் நம்
இதயங்களை இடம்மாற்றியது
தவறன்றோ...

இதை உணர்ந்தும் துணிவுடன்
செயற்பட்டது நாங்கள் - பாவம் எம்
கண்களையும்ää இதயத்தையும்
தண்டிப்பதுதான் நியாயமா..!!

கண்ணீர் சுமை தாளாது
கண்மடல்கள் சிவந்துக் கிடக்க
பிரிவுத் துயர் தாளாது இதயச்
சுவடுகளும் நாளுக்கு நாள்
வெடித்துச் சிதறுகின்றன..!

புரிந்தும் நாங்கள்
இனியும் மௌனம் காப்பதுதான்
நியாயமா..!!

தோற்றுப்போன நம் காதலை
தொடர்ந்தும் வாடவிடாது புதுப்பொழிவுடன்
ஜொலித்திட வைப்பதற்காய்
தீக்குள் ஜனனித்த பீனிக்ஸ் பறவைகளாய்
மீண்டும் தீக்குள்ளிருந்தே உயிர்பெற்றிடுவோம்...
புது உலகை நோக்கி நகர்ந்திடுவோம்...
-எஸ்.எச்.ஐனுள் ஹிமாயா,
கொழும்பு-12.

No comments:

Post a Comment