
சோகங்களையே
சுயசரிதையாய்ச்
சுமந்த - என்
வாழ்வில்
வார்த்தை ஜாடைகளை
வீசியெறிந்து என்னையே
உன்னிடம் தடம்புரள வைத்தாய்...!
வெந்துப்போன என்
வாழ்க்கைக்கு ஒத்தடம்
கொடுக்க வந்தவன்
என்றெண்ணி என்னையே
நான் உன்னிடம்
இழந்த பின்பு...
புதிதாய் ஒரு
புண்ணை புடம்
போட்டுவிட்டு ஓடிவிட்டாய்...!!
காதல் ஜாடைகள் காட்டிவிட்டு
இச்சைகள் தீர்ந்ததும்
தங்கையாய் - தோழியாய்
உறவுகளை மாற்றிக் கொள்ளும்
பச்சொந்திக் கூட்டத்தில் ஆண்கள்
இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள் - என்பதற்கு
நீயோர் அத்தாட்சி என்று கூறி
உன்னை நான் கேவலப்படுத்த விரும்பவில்லை..!!!
மாறாக - என்
வாழ்வின் சுயசரிதையே
சோகத்திற்குள் அடைக்கப்பட்டதுதான்
என்றெண்ணி - பழைய வாழ்வுக்குள்
இன்போடு நுழைகின்றேன் - இன்னொருமுறை
என் சுயசரிதையை மீட்டிப்பார்ப்பதற்காய்...!
-ஹிமாயா ஹமீட், கொழும்பு-12.
No comments:
Post a Comment