Thursday, November 19, 2009

நெஞ்சிக்குள் நெருப்பு!


என் முகவரியே
நீதான் - என்றெண்ணி
உன்னையே என்
உயிர்தாங்கும் உடல்
என்றெண்ணி - உறவுகளின்
உன்னதத்தில்
ஊறிப் போவதற்காய்
எத்தனை எத்தனை காலங்கள்
நானும் காத்திருந்தேன்...!

ஆனால் நீயோ - கேவலம்
பாலாய்ப் போன பணத்திற்கு
ஆசைகொண்டு
மாற்றான் வீட்டு
மணப்பெண்ணைக்
கரம் பற்றினாய்...!!

இன்று என் நெஞ்சமோ
நெருப்புக்குள் விழுந்த
மண் புழுவாய் - துடிதுடித்துக்
கொண்டிருக்கின்றது - மீட்பார்
துணையின்றி...!!!
-ஹிமாயா ஹமீட், கொழும்பு-12.

No comments:

Post a Comment