Monday, December 21, 2009

மனித இறைச்சியைத் தின்னும் மர்மப் பெண்!




பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்ணாருத்தி பல மனிதர்களைக் கொன்று அவர்களது இறைச்சியைத் தனது குளிர்சாதனப் பெட்டியில் வைத்து தேவைப்படும் போது அதனை புசித்து வருவது வழக்கமான நிகழ்வாகிவிட்டது.
இது பற்றி அந்தப் பெண் கூறுகையில், தனது உறவினர்களையும், விருந்தாளிகளையும் தனது வீட்டுக்கு விருந்துக்கு வருமாறு அழைத்து, அவர்களுக்குத் தெரியாமலேயே இந்த மனித மாமிசத்தை விருந்தாக வழங்குவதுடன், அதனை அவர்கள் உண்ணும்போது அதனை பார்த்து தான் உள்ள10ர மகிழ்வதுடன், தானும் இந்தச் சந்தோஷத்தில் பங்கெடுத்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் விருந்துக்கு வருபவர்கள் தான் சாப்பிடும் உணவு எத்தகையது என்று தெரியாமலே அவற்றை சாப்பிட்டுவிட்டு மிகவும் ருசியாக இருப்பதாகக் கூறி, வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ள மேற்படி பெண், அவ்வாறு வருபவர்களில் பலருக்கு "அடுத்த இறை தாம்தான்" என்பது தெரியாமலேயே சிறந்த சாப்பாட்டை உண்ட திருப்தியோடு, ஏப்பம் விடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த மாமிச வேட்டையில் தனது கணவனையும் கொன்று அவரது உடலையும் மேற்படி குளிரூட்டியில் வைத்து தேவைப்படும் போது தானும் உண்டு, நண்பர்களுக்கும் வழங்கிய இந்தப் பெண்ணை பிலிப்பைன்ஸ் பொலிஸார் கைது செய்து விசாரணைக்குட்படுத்தியுள்ள நிலையிலேயே அந்தப் பெண் மேற்படி தகவல்களை வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.
""கலியுலகம் என்னவெல்லாம் பண்ணுகின்றது பார்த்தீர்களா...!""

No comments:

Post a Comment