Thursday, January 7, 2010

நம்ம சிநேகாவா இது...?


வழமை போன்று இன்றைக்கும் சினிமா செய்திகள் மற்றும் சினிமா புகைப்படங்கள் என தேடல்கள் நடந்துக் கொண்டிருந்தது. காலையிலிருந்து தேடல்கள் ஆரம்பித்த போதிலும், சரியானதொரு புகைப்படம் கிடைக்காத நிலையில், நம்ம சினேகா ஏதும் புதுசா வந்திருப்பாங்க என்று அவருடைய புகைப்படத் தொகுப்பை ஆராய்ந்தேன். அதுவும் தோல்வியில் முடிய, கடைசியாக இன்னுமொருமுறை செய்த முயற்சியின் பயனாக சினேகாவின் அழகானதொரு புகைப்படம் தெரியவரவே, அதனைக் கிளிக் செய்தேன். அப்போது "சினேகாவின் முன்னால் கணவர் என்றொருவர் - இப்பொழுதும் சினேகாவுடன் சேர்ந்து வாழ ஆசைப்படுகின்றேன்" என்ற தலைப்போடு ஒரு ப்ளொக்கர் விலாசத்தை குறித்திருந்தார்.
ஆஹா இன்றைக்கு டொப் செய்தியொன்று கிடைத்துவிட்டது என்ற ஆர்வத்தோடு எல்லா வேலைகளையும் வைத்துவிட்டு அந்த விலாசத்தைத் தொடர்ந்தேன். அங்கே என்ன இருந்தது தெரியுமா..?

சினேகாவின் அருகிலிருப்பதைப் போன்ற ஏராளமான போட்டோக்களுடன் ஒரு காதல் கவிதையையும் இணைத்து முதலில் போடப்பட்டிருந்தது.
பிறகு எத்தனை எத்தனையோ வகையான (சினேகாவின்) புகைப்படங்களில் அவரும் இணைந்திருப்பது போன்ற காட்சிகளை மிகவும் துல்லியமான முறையில் க்ரெப்பிக்ஸ் முறையில் அமைத்து அதற்குக் கீழ், "தான் சினேகாவின் முன்னால் கணவனாக வாழ்ந்ததாக ஒருமுறை கனவு கண்டதாகவும்ää அந்தக் கனவின் கடைசியில் அவர் சிநேகாவை விவாவகரத்துச் செய்து கொள்வதாகவும் கண்டாராம். அந்தக் கனவைத் தொடர்ந்து இன்றுவரை சினேகாவுடன் வாழ்ந்த அந்தக் கனவுலகை மறக்க முடியாது தத்தளிப்பதாகவும், எனவே தொடர்ந்து அவருடன் வாழ ஆசைக் கொள்வதாகவும்" குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் பகுதி முழுவதையும் பார்த்த எனக்கு "அப்பாடா எப்படியெல்லாம் க்ரெப்பிக்ஸ்ஸைப் பயன்படுத்தி இந்த இளைஞர் சமுதாயம் மற்றவர்களை ஏமாற்றுகின்றது" என்ற எரிச்சலோடு தாங்க முடியாத கோபமும் வந்ததென்றால், அதையே ஆவலாகப் படித்து ஏமார்ந்து போன உங்களுக்கு எப்படியிருந்திருக்கும்...
ஐயோ.....

No comments:

Post a Comment