Friday, January 22, 2010

கனாக்காலம்...!


சொல்லிவிட்ட வாரத்தையின்
சுவையுணர்ந்தவன்
மீண்டும் - மீண்டும்
புசிக்கச் செய்தான்.

சொர்ப்பணங்கள் மெய்ப்பட
சொந்தங்களின் ஆசியோடு
ஈடேறிய
காதலும் - சொர்க்கத்தில்
குடிகொண்டது.

வருவோரின் செலவையும்
மிஞ்சி வருமானமும்
வாழ்வில்
ஜொலித்திடவே - புகுந்த வீட்டில்
சீதேவியாய் புகழப்பட்டாள்!
கணவனின் லீலைகளால்
கருவுற்றுச் சிறப்புற்றாள்...!

ஓர் இராப்பொழுதில்
நடுத்தெருவில் - கணவன்
விபத்தொன்றில் உயிர்நீக்கவே
விதியை நொந்தவளாய்
உடன்கட்டை - ஏறத்
துணிந்திட்டவேளை
வயிற்றில் குழந்தையின்
உதைப்பட்டதில் - அதன்
ஆசைகளை உணர்ந்தவள்
வாழ்வையை
அக்குழந்தைக்காய் செலவிட
நினைத்தாள்...!!

காலம் செய்த கோலம்!
சீதேவியாய் புகழப்பட்டவள்
மூதேவியாய், ராசியற்றவளாய்
கருதப்பட்டாள் - விதியின்
விளையாட்டால்
இன்று தன்
மருமகளால்
தரித்திரக்காரியாயும்
கருதப்படுகின்றாள்...!

No comments:

Post a Comment