Sunday, January 24, 2010

முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபத் தலைவர் மர்ஹ-ம் அஷ்ரப் அவர்களின் மறைவும்


ஸ்ரீ.மு.கா.செயலாளர் நாயகம் ஹஸன் அலி அவர்கள் வழங்கிய செவ்வி:-

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹ_ வபரகாத்துஹ_

கேள்விகள்:-
01. ஸ்ரீ.மு.க. ஸ்தாபகத் தலைவர் மர்ஹ_ம் அஷ்ரப் அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய நிலைபாடு பற்றிய உங்கள் கருத்து?
முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாட்டில் அன்றிருந்து இன்றுவரை எவ்வித மாற்றமும் இல்லை. இலங்கை முஸ்லிம்களின் அரசியல் தனித்துவம் என்றும் பேணப்படவேண்டும் என்ற கோட்பாட்டிலிருந்து நாம் மாறப் போவதும் இல்லை. முஸ்லிம்கள் செறிந்து வாழும் தென்கிழக்கிலும் ஒரு நிலத் தொடர்புள்ள அரசியல் அதிகாரம் அமையவேண்டும் என்ற அவரின் கொள்கைப் பிரகடனம் தான் எமக்கு இன்றும் வழிகாட்டிக் கொண்டிருக்கின்றது.

02. ஸ்ரீ.மு.க. ஸ்தாபகத் தலைவர் மர்ஹ_ம் அஷ்ரப் அவர்களது மரணத்திற்கான காரணங்கள் இன்றும் மர்மமாகவுள்ள நிலையில்ää அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா குமாரனதுங்க அவர்களினால் மேற்படி சம்பவம் தொடர்பான சரியான காரணங்களைக் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் எல்.எச்.ஜி.வீரசேகர தலைமையிலான ஆணைக்குழுää அக்குழு நியமிக்கப்பட்டதன் பிறகு கூட்டிய முதல் மாநாட்டின் போது ~மூன்று மாதங்களுக்குள் இச்சம்பவம் தொடர்பான உண்மை நிலைப் பற்றி மக்களுக்கு அறியத்தருவதாக| அறிவித்தார்களேää அதற்கான சரியான பலன் கிடைத்ததா?
இது தொடர்பாக நீங்கள் என்ன கூறவிரும்புகின்றீர்கள்?
இதனை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்படவில்லை எனினும்ää இயந்திரக் கோளாறு காரணமாகத்தான் விபத்து ஏற்பட்டது என முன்பு கூறப்பட்டது.
ஆனால் புலிகள் அழிக்கப்பட்டதற்குப் பின்னர் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரை நிகழ்த்தியபோதுää புலிகளால் கொல்லப்பட்ட பலரின் பெயர்கள் வாசிக்கப்பட்டபோது தலைவர் அஷ்ரஃபின் பெயரும் பிரஸ்தாபிக்கப்பட்டது. அந்தப் பட்டியலில் இது இடையில் சொருகப்பட்டதா அல்லது உண்மையான தகவலா என்பது பற்றி இன்னும் தெளிவில்லை. இந்நாட்டில் நடந்த எத்தனையோ மர்மங்களில் இதுவும் ஒன்றாகிக் கலந்துவிட்டது.

04. ஸ்ரீ.மு.க. ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப் அவர்களின் மறைவின் பிற்பாடு அவரால் ஸ்தாபிக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் பல பிரிவுகளாகப் பிரிந்து சென்றதற்கான காரணம்?
சுயநலம்தான். விலகிச் செல்பவர்கள் தாங்கள் அஷ்ரஃபின் பாசறையில் வளர்ந்ததாகவும்ää கட்சி பாதை தவறிச் செல்கின்றது. அதனால் தான் தாங ;கள் தாவியதாகவும் கூறுகின்றனர். அப்படியானால் அவர்கள் ஒருமித்து அல்லவா இருக்கவேண்டும். ஏன் ஆளுக்கொரு கட்சியை அமைத்துக் கொண்டுள்ளார்கள்? இதிலிருந்து ~எல்லோருக்கும் தலைவர்கள் ஆகவேண்டும் என்ற நப்பாசைதான் இதற்குக் காரணம்| என்பது தெளிவாகின்றதல்லவா?

05. அன்றைய முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் மக்களுக்காகச் செய்த சேவைகளுக்கும்ää இன்றைய சேவைகளுக்கும் வித்தியாசம் இருக்கின்றதா? காரணம்?
அன்றைய காங்கிரஸ_ம்ää இன்றைய காங்கிரஸ_ம் ஒரே இலக்கை நோக்கித்தான் செல்கிறது. ஆட்சியில் இருந்து கொண்டும் நாம் முஸ்லிம் சமூகங்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுத்தோம். அதனால்தான் பொத்துவில் கரங்கோவா காணிப் பிரச்சினையில் அரசின் போக்குப் பிடிக்காமல் வெளியேறினோம். எதிர்க்கட்சியில் இருந்து கொண்டும் இதனைத் தான் செய்கின்றோம்.
நம் சமூகத்துக்குப் பாதகமான சட்டமூலங்கள் பாராளுமன்றத்துக்கு வந்த போதெல்லாம் நாம் நீதிமன்றம் சென்று வாதாடி வெற்றி பெற்றுமுள்ளோம்.

06. பிரிந்து சென்றிருக்கும் முஸ்லிம் தலைமைகள் மீண்டும் இணைவதற்கான வாய்ப்புக்களைää இலங்கை வாழ். முஸ்லிம் மக்களின் ஏகப் பிரதிநிதிகளைக் கொண்டியங்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை எடுத்ததா? எடுத்திருந்தால் ஏன் இன்னும் பிரிந்த நிலையிலேயே அவர்கள் இருக்கின்றார்கள்?
ஒவ்வொரு தேர்தலின் போது நாம் இணைந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்து வந்துள்ளோம். சென்ற டிசம்பர் 25 ஆம் திகதி சம்மாந்துறையில் நடந்த ஒரு கூட்டத்திலும் எமது தலைவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். துரதிஷ்டவசமாக எம்மிடம் அமைச்சுப் பதவிகள் கொடுக்கும் அதிகாரங்கள் இல்லையே...

07. முஸ்லிம் காங்கிரஸ் ஒரு சமயத்தில் அரசாங்கத்தோடு இணைந்திருந்தது. ஆனால் தற்போது மீண்டும் அதிலிரு;து விலகி எதிர்க்கட்சியோடு இணைந்து கொண்டுள்ளது. இதுபற்றிய உண்மையான காரணம் என்ன?

08. நடைபெறப் போகும் ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் எதிர்க்கட்சித் தலைவர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிப்பதற்குக் காரணம் என்ன?
ஊழல்ää குடும்ப ஒழிப்புää பெரும் தேசிய கடும் போக்குவாதிகளின் மேலாதிக்கம்ää கோலோச்சம் மமதைமிக்க போக்குää இவற்றையெல்லாம் இலகுவாக அமுல்படுத்துவதற்காக எதிர்க்கட்சியிலிருந்து உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்கும் அசிங்கமான அரசியல்ää திட்டமிடப்படாத பொருளாதார இலக்குகளால் அதல பாதாளத்தை நோக்கிச் செல்லும் வாழ்க்கைச் செலவுää இப்படி எவ்வளவோ விடயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

09. ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து எதிர்நோக்கவுள்ள பாராளுமன்றத் தேர்தலின் போது உங்கள் செயற்திட்டம் எப்படி இருக்கும்?
தனியாக தேர்தலில் போட்டியிடுவீர்களா? அல்லது எதிர்கட்டியோடு இணைந்து போட்டியிடுவீர்களா?
தேர்தல் முடிந்த பின்னர் கட்சிப் போராளிகளிடமும்ää கட்டமைப்புக்களிடமும் கலந்தாலோசித்தே நாம் முடிவெடுப்போம்.

10. முஸ்லிம் காங்கிரஸ் மூலம் வடகிழக்கு வாழ் முஸ்லிம் மக்களே பெரிதும் உதவிகளைப் பெற்றுக் கொள்வதாகவும்ää ஏனைய பிரதேச மக்களுக்கான செயற்பாடுகளுக்கு முன்னுரிமைகள் வழங்கப்படுவதில் குறைபாடுகள் அல்லது தாமதங்கள் நிலவுவதாகக் கூறப்படும் கூற்று தொடர்பான உங்களின் கருத்து?
இக்கூற்றினை அவர் மறுத்திருக்கின்றார். தெளிவுபடுத்தியுள்ளார். ஊடகங்களின் திரிவுபடுத்திய செய்திகள்தான் இதற்குக் காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார். இக்கூற்று ஆரம்பத்தில் வெளிவந்த போது அதனைக் கண்டித்தவர்கள் நாங்கள். ஆனால் அந்நேரம் அரசுடன் இருந்தவர்கள் அமைதி காத்தார்கள். இன்று அவர் ஜனாதிபதிக்கு எதிரான வேட்பாளராக வந்த பின்பு தான் திடீரென விழித்துக் கொண்டுள்ளார்களாம். ~டியூப் பல்ப்ஸ்கள் போல.|

11. எதிர்காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் மக்களுக்காக எவ்வாறான உதவிகளைச் செய்யவுள்ளது?
முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாட்டில் அன்றிருந்து இன்றுவரை எவ்வித மாற்றமும் இல்லை. இலங்கை முஸ்லிம்களின் அரசியல் தனித்துவம் என்றும் பேணப்படவேண்டும் என்ற கோட்பாட்டிலிருந்து நாம் மாறப் போவதும் இல்லை. முஸ்லிம்கள் செறிந்து வாழும் தென்கிழக்கிலும் ஒரு நிலத் தொடர்புள்ள அரசியல் அதிகாரம் அமையவேண்டும் என்ற அவரின் கொள்கைப் பிரகடனம் தான் எமக்கு இன்றும் வழிகாட்டிக் கொண்டிருக்கின்றது.

12. யுத்த அனர்த்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கான உதவிகள் முஸ்லிம் காங்கிரஸினால் மேற்கொள்ளப்பட்டதா?
அதன் தற்போதைய செயற்பாடுகள் எவ்வாறிருக்கின்றது?
அடிக்கடி பாராளுமற்த்தில் குரல் கொடுத்துக் கொண்டுவருகின்றோம். இரண்டு முறை ஒத்திவைப்புப் பிரேரணைகளை நகர்த்தி பல உண்மை நிலைகளை வெளிப்படுத்தியுள்ளோம்.
சர்வதேச மட்டங்களில் இதுபற்றிய விடயங்களை முதன்மைப்படுத்தியுள்ளோம். வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் பேசும்போது எப்போதும் இந்த விடயங்களுக்கு முன்னுரிமை கொடுத்துவந்துள்ளோம்.

13. பயங்கரவாதிகளால் 1983 ஆம் ஆண்டு விரட்டியடிக்கப்பட்ட மக்கள்ää பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களது பிரதேசங்களுக்குச் செல்லாதிருப்பதற்குக் காரணம் என்ன?
குறிப்பாக யாழ்.மாவட்ட மக்கள் அங்கு இதுவரை சென்று தமது இருப்பிடங்களில் குடியேறாதிருப்பதற்கான காரணம்?
யாழ்.மாவட்ட முஸ்லிம்களுக்கு நெறிப்படுத்தப்பட்ட உதவிகள் கிடைப்பதில்லை. 20 வருடங்களுக்கு முன்னர் அவர்களால் கைவிடப்பட்ட காணிகளின் சொத்துரிமையை உறுதிப்படுத்துவதற்கு சில சட்ட மாற்றங்கள் செய்யப்படவேண்டும். அதனைச் செய்வதற்குக் கூட வக்கில்லாத அமைச்சர்கள் இந்த அரசாங்கத்தில் ~மீள்குடி|யேற்றம் செய்வதாகப் பிதற்றுகிறார்கள்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவரால் பாராளுமன்றத்தில் இவ்விடயம் எப்போது பிரஸ்தாபிக்கப்பட்டாலும்ää ~ஒரு மாதத்துக்குள்| சட்டம் வந்துவிடும் என்ற சிலையான பதிலை மட்டும் கூறித் தப்பித்துக் கொள்வார்கள்.

14. முஸ்லிம் மக்களின் ஏகக் கட்சி என்ற வகையில் அவர்களுக்கான உரிமைகளை உங்களால் பெற்றுக் கொடுக்க முடியுமா?
ஏன் முடியாது?
அதனைத் தான் இன்றுவரை செய்து வருகின்றோம். காலம் கனிந்துவரும் போது இன்னும் வேகமாக நாம் இயங்குவோம்.

15. பயங்கரவாதிகளால் பிடுங்கியெடுக்கப்பட்ட முஸ்லிம் மக்களது உரிமைகளுக்காக உங்களால் துணிந்து குரல் கொடுக்க முடியுமா?
பயங்கரவாதம் என்பது ~புலிப் பயங்கரவாதம்| மட்டுமல்ல. புலிகளின் போர்வைக்குள் ஒழிந்துக் கொண்டுள்ள வேறு பயங்கரவாதங்களும் உண்டு. அவற்றுக்கும் எதிராக நாம் துணிந்து குரல் கொடுத்துத்தான் வருகின்றோம்.

16. முஸ்லிம் மக்கள் செறிந்து வாழ்ந்த கிழக்கு மாகாணத்தில் தற்போது அவர்களது பூர்வீக இடங்கள் கூட ஏனையவர்களால் சூறையாடப்பட்டுள்ளதே. அப்படியானால் இம்மக்களது எதிர்காலம் பற்றி என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?
இவர்கள் விழித்துக் கொள்ளாவிட்டால் இன்னும் 50 வருடங்களில் எமது பிரதேசங்களில் நாம் மிகச் சிறிய பரம்பலாக மாறிவிடுவோம். இதுபற்றி பாராளுமனற்த்தில் நாம் அடிக்கடி பிரஸ்தாபித்தபோது எமது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ~வெறும் கட்டுக்கதை| என்று கூறுகிறார்கள்.
அம்பாறை மாவட்டத்திலுள்ள அரசிலுள்ள அமைச்சர் பெமுக்கள் பெரும் தேசிய கடும்போக்குவாதிகளின் நிகழ்ச்சி நிரலை அமுல்படுத்தி வருகின்றார்கள்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளைக் கூட கையளிக்க முடியாத கையாலாகாத நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
சவூதிஅரேபியாவின் தேசியக் கொடி எங்களது தென்கிழக்கு மண்ணில் எமது முஸ்லிம் சகோதரர்களின் கட்சியில் தெரிவான பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவரால் எரிக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் நடந்த வரலாறும் உண்டு. அந்தக் கொடியில் எங்களது உயிரிலும் மேலான ~கலிமா| பொறிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

17. இனிவரும் காலத்திலாவது முஸ்லிம் மக்களுக்கான விடிவை அவர்களால் பெற்றுக் கொள்ள முடியுமா?
முஸ்லிம்கள் ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப் பிடிப்பதைப் பொறுத்துத்தான் இதன் வேகத்தினைக் கணிப்பிட முடியும். கயிற்றை விட்டுவிட்டு சால்வையைப் பிடித்துக் கொண்டால் விடிவு எப்படிக் கிடைக்கும்?

18. கிழக்கு மாகாணத்தில் தற்போது தமிழ் தலைமைகளது ஆட்சியே நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் முஸ்லிம் தலைமைகளின் கிழக்கு முஸ்லிம் மக்களுக்கான செயற்பாடுகள் பற்றிய உங்கள் கருத்து?
கிழக்கு மாகாண அமைச்சர்கள் எல்லோரும் சேர்ந்து அளுனருக்கெதிராக செய்த முறைப்பாடுகள் குப்பைக் கூடைக்குள் போடப்பட்டுவிட்டது. பதின்மூன்றாவது திருத்தச் சட்டம். அதற்கு மேலான அதிகாரம் என்ற வார்த்தை ஜாலங்களும் தற்போது மறைந்து வருகின்றன. இந்த் பின்னணியில் கிழக்கு மாகாண முஸ்லிம்களும்ää தமிழர்களும் விழித்துக் கொள்ள வேண்டியுள்ளது.
கிழக்கு மண்ணில் தமிழ் - முஸ்லிம் உறவுகளை விரிசலாகவே வைத்துக் கொள்ள வேண்டும் என பெரும்பான்மை சமூகம் விரும்புகின்றது. அதனை செயற்படுத்துவதற்கான குழுக்களும் களத்தில் இறக்கப்பட்டுள்ளன. இந்த மண் நிரந்தரமான ஒரு யுத்த பூமியாக இருப்பதனால் இதனைச் சுரண்டுவதற்கு இலேசாகவுள்ளது. இதன் உண்மையை இரண்டு சமூகங்களும் உணர்ந்து கொண்டு ஒற்றுமையாக செயற்படவேண்டும்.
அப்போதுதான் இரண்டு சமூகங்களும்ää இந்த மண்ணும் மகிமை பெறும்ää காப்பாற்றப்படும். இந்த இலக்கை அடைவதில் இப்போது நல்ல முன்னேற்றம் கண்டுள்ளோம். வளமான ஒரு வாழ்வுக்காகப் பிரார்த்திப்போமாக.

19. ~~சிறுபான்மை இன மக்கள் இந்த நாட்டில் உரிமை கொள்ள முடியாதென்று|| கூறிய எதிர்க்கட்சித் தலைவர் சரத் பொன்சேகாவுக்கு நீங்கள் ஆதரவளிப்பதின் மூலம்ää முஸ்லிம் மக்களுக்கான உரிமைகளை வெற்றி கொள்ள முடியுமென்று நீங்கள் நம்புகின்றீர்களா?
அன்று இராணுவத் தளபதியாக இருந்து ஜனாதிபதிக்கு ஆதரவாகச் செயற்பட்ட காலத்தில் சரத் பொன்சேகா தெரிவித்த ~~சிறுபான்மை இன மக்கள் இந்த நாட்டில் உரிமை கொள்ள முடியாது|| என்ற கருத்தை ஊடகங்கள் திரிவுபடுத்திää மெழுகுபூசி தத்தமக்கேற்றாற்போல் செய்திகளை உருவாக்கி வெளியிட்டிருந்தது. அப்போது நாங்கள் அரசாங்கத்திற்கு ஆதரவாகச் செயற்பட்ட காலம் என்ற போதிலும்ää சரத் பொன்சேகாவின் கருத்துக்கெதிராக நாங்கள் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தோம். ஆனால் அதுபற்றி அமைச்சுப் பதவியில் இருந்த ஏனைய முஸ்லிம் அமைச்சர்கள் எந்தவிதக் கேள்வியையும் கேட்கவுமில்லை. அதற்கு எதிராகக் கருத்துத் தெரிவிக்கவுமில்லை.
ஆனால் அண்மையில் அதாவது ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு முன்னர் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியில் ~~பெரும்பான்மையினம் பௌத்த இனமாகவுள்ளதாகவும்ää எனவே அவர்களை விட சிறுபான்மையினராக முஸ்லிம்ää தமிழ் மக்களுக்கு அதிகளவான உரிமைகளைக் கொடுக்கவோää பெற்றுக் கொள்ளவோ முடியாது|| என்று சொல்லவந்த கருத்தைää சுலபமாகக் கூறியதாகவும்ää இதனை ஊடகங்கள் தமக்கேற்றாற்போல் திரிவுபடுத்தி வெளியிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து தற்போது ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதால் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் அப்போதைய கருத்தை மீண்டும் மீண்டும் பேசி ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா மீது சேறு பூச நினைக்கின்றார். அதுமட்டுமன்றி ஜனாதிபதி வேட்பாளராகக் கலமிறங்கியுள்ள முஸ்லிம் வேட்பாளர் ஒருவரும் அந்தக் கருத்தை வைத்தே பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றார் என்பதை நினைக்கும் போது சிரிப்புத்தான் வருகின்றது.
பெரும்பான்மையினராக பௌத்தவர்கள் வாழும் இந்த நாட்டில் அவர்களை விட சிறுபான்மையினராகிய நாங்கள் அவர்களை விடவும் உரிமைகளைப் பெற்றுக் கொள்ள நினைப்பது வேடிக்கையானதுதான் என்பதை நாங்களும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

16. எதிர்வரும் பொதத் தேர்தலின் போது முஸ்லிம் காங்கிரஸ் யாழ்ப்பாணத்தில் போட்டியிடுமா?
நிச்சயமாகää அங்கே எமது பல அமைப்புக்கள் உள்ளன. அவற்றை மையமாக வைத்து நாங்கள் போட்டியிடுவோம்.

07. அப்படியானால் யாழ்ப்பாண மக்களிடமிருந்து உங்களுக்கு வாக்குகள் கிடைக்கப்பெறுமென்று நீங்கள் நம்புகின்றீர்களா?
கடந்த மாகாண சபைத் தேர்தலின் போது யாழ்ப்பாணத்திருந்து 100க்கு இருபது வீதமானவர்களது வாக்குகளே பெறப்பட்டன. ஆனால் இம்முறை அப்படியல்ல. அனைத்து மக்களுக்கும் தமது சுயவிருப்புக்களோடு வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. எனவே அங்குள்ள மக்கள்ää குறிப்பாக முஸ்லிம் மக்களது வாக்குகள் நிச்சயம் எங்களை வெற்றியடையச் செய்யும் என்று நாங்கள் நம்புகின்றோம்.

18. கிழக்கு மகாணத்தில் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலின் போது கிடைக்கப்பெறாத வாக்குகள் இவ்வாண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் போது முஸ்லிம் காங்கிரஸிற்குக் கிடைக்குமா?
நிச்சயமாக கிடைக்கும். கடந்த மாகாண சபைத் தேர்தலின்போது எமது வேட்புமனுப் பத்திரம் ரத்துச் செய்யப்பட்டதால் தான்ää கூடுதலான வாக்குகளை ஏனைய கட்சிகள் பெற்றுக் கொண்டன. இதே முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்டிருந்தால் நிச்சயம் அந்தத் தேர்தலிலும் நாங்களே வெற்றிபெற்றிருப்போம். அப்படி வெற்றிபெற்றிருந்தால் இன்று கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் இழந்த சொத்துக்கள் மற்றும் உரிமைகளைப் படிப்படியாகப் பெற்றிருப்பார்கள். எதற்கும் ஒரு காலம் வேண்டும். அந்த வகையில் எதிர்வரும் பொதுத் தேர்லில் அதிக வாக்குகளால் வெற்றி பெற்று அம்மக்களுக்கான உரிமைகளையும்ää இழந்த சொத்துக்களையும் நிச்சயம் மீட்டுக் கொடுப்போம்.

19. 11.01.2009 அன்று ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட ~மஹிந்த சிந்தனை| என்னும் இரண்டாவது சட்டவாக்கத்தை நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா? அது தொடர்பான உங்களது கருத்து என்ன?
அதில் முதன்மைப்படுத்தப்பட்ட விடயம் என்னவென்றால்ää பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை மேலும் பல மாற்றங்களோடு அமுல்படுத்துவதுதான். குறிப்பாக மத்தியில் கூட்டாட்சிää மாநிலத்தில் சுயாட்சி என்னும் அடிப்படைக் கொள்கையைக் கொண்டதாக இந்த மஹிந்த சிந்தனை சட்டவாக்கம் வெளியிடப்பட்டுள்ளது. 13ஆவது திருத்தச் சட்டமானது 2004 ஆம் ஆண்டளவில் அரசாங்கத்தின் கைகளுக்கு வழங்கப்பட்டாலும் கூடää இன்றுவரை அதனை அமுல்படுத்தாமல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஏமாற்றுக் கருத்துக்களையே தெரிவித்து வந்திருக்கின்றார். நான்கு வருடங்களாகியும் அமுல்படுத்தாத அந்த 13ஆவது திருத்தச் சட்டத்தை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அமுல்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி வெளியிட்டிருக்கும் கருத்து வெரும் தேர்தல் பிரச்சாரமாகவே நம்மால் கருதப்படுகின்றது.

20. கடைசியாகää முதலில் ஜனாதிபதித் தேர்தல்ää அதனைத் தொடர்ந்து பொதுத் தேர்தல் - இப்படித் தேர்தலுக்குப் பின் தேர்தல்களை எதிர்நோக்கும் முஸ்லிம் காங்கிரஸின் எதிர்காலச் செயற்பாடுகள் எப்படி அமையப் போகின்றது?
நிச்சயமாக நாங்கள் முஸ்லிம் மக்களது உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதற்காகவே அவர்களால் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளோம். எனவே அவர்களது உரிமைகயைப் பெற்றுக் கொடுப்பதே எமது பிரதான நோக்கம். அதற்காகவே நாங்கள் கடந்த காலங்களில் அரசாங்கத்தோடு இணைந்து செயற்பட்டோம். ஆனால் ஜனாதிபதியின் பசப்பு வார்த்தைகளுக்குச் செவி சாய்த்தவாறு அவரோடு தொடர்ந்தும் இருந்தால் முஸ்லிம் மக்களுக்கான உரிமைகள் பறிபோய்விடும் என்பதை நன்கு உணர்ந்தவர்களாகவே நாங்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறி எதிர்க்கட்சியோடு இணைந்து கொண்டுள்ளோம். அதற்காக எதிர்க்கட்சி மூலம் முஸ்லிம் மக்களுக்கான அனைத்து உரிமைகளையும் பெற்றுக் கொள்ள முடியுமென்று நான் கூறவரவில்லை. மாறாக ஜனாதிபதியால் முஸ்லிம் மக்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளை எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு எதிர்ப்போம். தேவையேற்பட்டால் அதற்கெதிராக வழக்குத் தாக்கல் செய்து முஸ்லிம் மக்களுக்கான உரிமைகளை சரியான முறையில் பெற்றுக் கொள்ளவும் தயங்கமாட்டோம்.
குறிப்பாக தேர்தல் காலம் முடிந்ததும் வடக்கு மற்றும் கிழக்கு முஸ்லிம் மக்கள் இழக்கப்பட்ட தத்தமது சொந்த இடங்களில் மீள்குடியேறுவதற்கான நவடிக்கைகளை மேற்கொள்வதே எமது பிரதான நோக்கமாக அமையும். அத்துடன் அவர்களது மீள்குடியேற்றத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நாங்கள் முன்னின்று செய்து கொடுப்போம் என முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக உறுதியளிக்கின்றேன்.
வஸ்ஸலாம்...

No comments:

Post a Comment