~~ஆயுபோவ் அனார்க்கலி...||
அனார்க்கலி:- ஆயுபோவ்...||
கோஹமத அனார்க்கலி செப சணீப? இதிங் கியன்னகோ ஜீவிதே கொஹமத யன்னே..?
அனார்க்கலி:- ப்ரஷ்னயக் ஹே அனே. ஒஹே யனவா இதிங்... ஐயோ ஒயா மடவடா மார லஸ்ஸனட சிங்கள கதா கரனவனே.... ஷோக் அனே. பலன்னகோ மங் சிங்கள உடான மடம மெஹெம கதாகரன்ன பேனே.. அனிக மட சிங்கள லியன்னää கியவன்ன ஏம தன்னெவத் நேனே.. கியன்னத் லெஜ்ஜய் தமய்... ஏத் எத்த கியன்னெகே பிரஷ்னயக் வென்னேநே... என்று ஆரம்பித்த பேட்டியின் தமிழ் வடிவம் இதோ..
கேள்வி :- உண்மையாகவா நீங்கள் சொல்வது? உங்களுக்கு சிங்களம் எழுதää வாசிக்கத் தெரியாதா? அப்படியானால்....
அனார்க்கலி:- நான் சொல்வது உண்மையே. அம்மா சிறு வயதில் என்னை அருகில் வைத்துக் கூறும் கதைகளைக் கேட்டே என்னால் சிங்களம் கதைக்கக்கூடிய பழக்கம் ஏற்பட்டது.
~~அனார்க்கலியின் வார்த்தைகளைக் கேட்டால் உங்களுக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும். இதில் ஆச்சரியப்படும் விதத்தில் ஏதும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. காரணம் நம்நாட்டின் புகழ்பெற்ற நடிகை ருக்மணி தேவியே தனக்கான வசனங்களையும்ää பாடல்களையும் ஆங்கிலத்தில் எழுதி அதனை மனப்பாடம் செய்து வைத்துக் கொண்டே பேசுவார்ää பாடுவார். அப்படி இருக்கும் போது அனார்க்கலியின் வார்த்தைகளைக் கேட்டு எனக்கொன்றும் ஆச்சரியம் ஏற்படவில்லை...||
கேள்வி :- அப்படியானால் அனார்க்கலி உங்களுக்கு அது கடினமாகத் தெரியவில்லையா..?
பதில்:- நடிப்பின் மீதிருந்த ஆசையோடு நான் அதனை மேற்கொண்டதால் அது கடினமாகத் தெரியவில்லை. எனக்கான வசனங்கள் கையில் கிடைத்ததும்ää அதனை வீட்டில் வைத்து அம்மாவிடம் வாசிக்கச் சொல்லி ஆங்கிலத்தில் எழுதி மனப்பாடம் செய்து கொள்வேன். வசனங்களைச் சும்மா சொல்ல முடியாது. அவற்றை உணர்வுபூர்வமானää கதைப்பாங்கோடுää கேட்பவர்களின் உள்ளத்தைத் தொட்டுச் செல்லும் விதத்தில் பேசவேண்டும். எனவே அவற்றை மனப்பாடம் செய்வது மட்டுமன்றி பல தடவைகள் மனம் திருப்திப்படும் வரையில் கண்ணாடி முன்னின்று சொல்லிப் பார்ப்பேன். அத்துடன் வீட்டிலுள்ளவர்களிடம் ஒவ்வொரு வசனத்திற்கான அர்த்தத்தையும் கேட்டறிந்துகொண்டு அந்த வார்த்தைகளை கடைசியாக அவர்களிடம் சொல்லிக் காட்டி திருப்திப்படுத்திக் கொள்வேன்.
~~அனார்க்கலியின் தற்போதைய வயது 21. இந்த வயதில் அவர் சிங்களத் திரையுலகின் சின்னத் திரையில் மட்டுமல்லää திரைப்படங்களிலும் நடிக்கும் சிறந்த நடிகையாகவும் அனைவர் மத்தியிலும் பேசப்படுபவர். உண்மையில் அனார்க்கலி தான் ஒரு நடிகையாக வலம்வருவேன் என்ற எண்ணத்தோடோää கனவுகளோடோ வளர்ந்தவரல்ல. அவர் தனக்குக் கிடைக்கப்பெற்ற வாய்ப்புக்களை நன்கு பயன்படுத்திக்கொண்டு திரையுலகில் தனக்கான இடத்தைப் பிடித்துக் கொண்டார் என்று சொன்னாலும் அது மிகையாகாது. ஆனால் அவர் இச்சிறுவயதிலேயே சிறந்த நடிகையாகத் திகழ்வதற்கு முதல் காரணம் அவரது வீடும்ää பெற்றோரும்தான். காரணம் அவரது பெற்றோர் சிங்களச் சினிமா உலகில் வலம்வந்தவர்கள்.||
கேள்வி:- நீங்கள் எப்படி திரையுலகில் கால் பதித்தீர்கள்?
பதில் :- சிறு வயதிலிருந்தே பெற்றோரோடு சேர்ந்து சினிமா ஷ_ட்டிங் செய்யும் இடங்கள்ää தயாரிப்புச் செய்யும் இடங்கள் அதேபோல் திரையரங்குகளுக்குச் செல்வது வழக்கம். எனவே எனக்கு சினிமாத்துறைக்கு வந்ததும் நடிப்பது என்பது ஒரு கஷ்டமான ஒரு விடயதாகத் தெரியவில்லை. அதேபோல் என் பெற்றோருக்கும் என்னை நடிகையாக்க வேண்டும் என்ற எண்ணம் சற்றும் இருக்கவில்லை. அதற்கான தேவையும் அவர்களுக்கு இல்லை.
கேள்வி:- அப்படியானால் நீங்கள் சினிமாவுக்குள் வந்து குறுகிய காலத்திலேயே மக்களால் புகழப்பட்டதற்கான காரணம்...?
பதில்:- ஒரு புன் சிரிப்பு... சோமரத்ன திசாநாயக்கவும்ää ரேணுகா பாலசூரியவும் இணைந்து ~~இடிகன்|| என்னும் நாடகத்தைத் தயார் செய்து அதில் சிறு பிள்ளை வேடத்தில் நடிப்பதற்கு ஒரு சிறுமியைத் தேடி எல்லா இடங்களுக்கும் அழைந்துத் திரிந்து கடைசியாக எமது பாடசாலை அதிபரிடம் வந்து சேர்ந்தார்கள். அப்போதுதான் அதிபரால் எனது பெயர் கூறப்பட்டது. அப்போது எனக்கு எட்டு வயதுதான். அதிபரின் சிபாரிசைக் கொண்டு அவர்கள் என்னை அந்த நாடகத்தில் நடிக்க வைத்தார்கள். அந்த நாடகத்தில் நடித்தபோது எனது பெற்றோருக்கோää எனக்கோ தெரியவில்லை இது என் கலைப் பயணத்தின் முதற்படி என்று. அதற்குப் பிறகு 15 வயது வரை எந்தத் திரைப்படத்திலும் நடிப்பதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. 15ஆவது வயதில் ~~பிஸ்ஸ_ ட்ரபல்|| என்னும் சிங்களத் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புக் கிடைத்தது. அப்போதும் இது என் கலைப்பயணத்தின் படிக்கட்டுக்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ளவில்லை.
~~ஆனால் ~பிஸ்ஸ_ ட்ரபல்| என்னும் திரைப்படத்தைத் தொடர்ந்து ஆனார்க்கலிக்கு ஏராளமான பட வாய்ப்புக்களும்ää நாடக வாய்ப்புக்களும் வர ஆரம்பித்தன. அப்போதுதான் அனார்க்கலிக்குள் தோன்றிது ~~நான் ஒரு கதாநாயகியாக நடித்தால் என்ன|| என்று. அப்படித் தோன்றியதில் அவர் கதாநாயகிய நடித்த முதல் சிங்களத் திரைப்படம் ~வன் சொட் வன்| திரைப்படம்.
நடிப்புக்குள் தான் தொடர்ந்தும் பிரசேவிக்க வேண்டும். மக்களால் தானும் ஒரு சிறந்த நடிகை என்று பேசப்படவேண்டும் என்ற நோக்கங்களையும்ää ஆசைகளையும் மனதிற் கொண்டு இப்படத்தில் நடித்த அனார்க்கலிக்கு தான் நினைத்தபடியே நடந்தேறியது மிகச் சந்தோஷசத்தையும் பூரிப்பையும் கொடுத்ததுää இந்தத் திரைப்படம் ~ஹவுஸ் புல்| என்ற பதாதைகளோடு பாதைகளைச் சுற்றி வலம்வருவதையும்ää பாதை முழுவதும் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகளும் அனார்க்கலியை தொடர்ந்தும் திரையுலகில் திறம்படச் செல்வதற்கு வழிசமைத்தது.
கேள்வி :- அனார்க்கலி நீங்கள் குடும்பத்தில் ஒரே பிள்ளை. அப்படியிருக்கும் போது நீங்கள் கல்வியை இடைநடுவில் விட்டுவிட்டு திரையுலகிற்குள் நுழைவதற்கு உங்கள் பெற்றோர் சம்மதித்தார்களா?
பதில் :- உண்மையில் அந்த வகையில் நான் கொடுத்துவைத்தவள்தான். எனது பெற்றோர் ~தன் பிள்ளை தனது எதிர்காலத்தை எவ்வாறு தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதை அவளே தீர்மானிக்கவேண்டும்| என்ற நிலைப்பாட்டைக் கொண்டவர்கள். எனவே அவர்கள் என்னைத் தடுக்கவே இல்லை. மாறாக அவர்கள் எனக்கு ஒத்துழைப்பு வழங்குபவர்களாகவே இருந்தார்கள். அதை விட்டு ~நீ டாக்டராகவேண்டும்ää நீ வக்கீளாகவேண்டும்| என்று அதட்டும் தாய் தந்தையாக அவர்கள் இருக்கவில்லை. அந்த வகையில் அவர்களைப் பாராட்டுவதற்கு என்னால் வார்த்தைகளைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை.
கேள்வி :- சரிää உங்களது கல்விப் பயணத்தைப் பற்றிச் சற்றுக் கூறுங்களேன்...
பதில் :- நான் ஆரம்பக் கல்வி தொடக்கம் கற்றது கொழும்பில் உள்ள ஒரு பிரபலமான சர்வதேச பாடசாலையில். எனவே தான் எனக்கு சிங்களம் கொஞ்சம் கஷ்டம். நான் கதைக்கும் போதே உங்களுக்கு அது புரிந்திருக்கும்.
~வெட்கத்துடன் கூடவே சிரிப்பு..| ஆனால் ஆங்கிலம்ää பிரெஞ்சுää ஜெர்மன் போன்ற மொழிகள் எனக்கு நன்றாகவே தெரியும். எனது நண்பர்கள் அனைவரும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால் எனக்கு சிங்களத்தின் தேவை பாடசாலை வாழ்விலும் ஏற்படவில்லை.
கேள்வி :- கலையுத்துறை பற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?
பதில் :- கலைத்துறை என்பது மிகவும் கஷ்டப்பட்டுää பல தியாகங்களுக்கு மத்தியில் மேற்கொள்ள வேண்டிய ஒரு அருமையான தொழில். அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. வாய்ப்புக் கிடைப்பவர்கள் அனைவரும் அதனை சரியாகப் பயன்படுத்திக் கொள்கின்றார்களா என்றால் அதற்கு இல்லையென்றே சொல்லலாம்.
விடியற் காலையில் எழும்பவேண்டும். நடுநிசியானாலும் தூங்கமுடியாது. முழு நாளும் மேக்கப் (அலங்காரம்) செய்தவாறுää மனிகுமிழ்களின் ஒளியோடு தினமும் பயணிக்கும் இராஜவாழ்க்கையது. கொழும்பு-07 இல் வசிக்கும் ஒரு யுவதிக்கு நடுநிசியில் பயணம் என்றால் இலேசானதல்ல.
~~பொதுவாகவே கொழும்பு-07இல் வசிக்கும் யுவதிகள் குறிப்பாக திரையுலக நட்சத்திரங்கள் பற்றி தவறான வார்த்தைகள் மக்களால் பேசப்படுவது வழக்கம். அப்படியிருக்கும் போது நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் திரையுலக நட்சத்திர நாயகி அனார்க்கலி ஆகர்ஷாவும் அதே கொழும்பு07ஐச் சேர்ந்தவர்தான். அது பற்றி அவர் இவ்வாறு கூறுகின்றார்.
கேள்வி :- நீங்கள் கொழும்பு-07ஐப் பற்றிச் சொன்னதால் கேட்கின்றேன். கொழும்பு-07 இல் வசிக்கும் குறிப்பாக திரையுலக நட்சத்திரங்களைப் பற்றி கூறப்படும் தவறான வார்த்தைகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?
பதில் :- நான் கொழும்பு-07 இல் மட்டுமல்லää உலகில் எந்த மூளையில் வசித்தாலும் ஒரு தொழில் செய்வதானால் பல தியாகங்களைச் செய்யவேண்டும். என்ன ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வோர் தியாகம் என்று வரும். ஏன் ஊடகத்துறையையே எடுத்துக் கொள்வோமே... அப்பப்பா உயிரையே துச்சமாக மதித்துää மக்களின் நலனை மனதிற் கொண்டு மனதிற்கு விரோதமில்லாமல் உண்மையான நிலைப்பாட்டோடு நின்று செய்யக்கூடிய தொழில். அதை விட சினிமாத்துறை ஒன்றும் பெரிய தியாகத்தோடு செய்யக்கூடியதொன்றல்ல. என்ன தியாகங்களில் பலவகையுண்டு என்ற கூறலாம். எந்தத் தொழிலையும் தியாக மனப்பான்மையோடும்ää பல விட்டுக் கொடுப்புக்களோடும்ää சகிப்புத்தன்மையோடும் செய்தாலே விரைவில் அத்துறையில் சிறப்பாக மிளிர முடியும். நான் கொழும்பு-07இல் உள்ள ரொஸ்மீட் பகுதியில் வசிக்கிறேனே தவிரää கொழும்பு-07இல் வசிக்கவில்லை என்பதே உண்மை.
கேள்வி :- உங்களைப் போல் வாழ்வை ஒளியமானதாக வாழ்ந்த ஒரு பெண்ணுக்கு இந்தத் தியாகம் தர்ம சங்கடமாகத் தோன்றவில்லையா...?
பதில் :- அதைவிட எனக்கு நடிப்புத்துறையில் ஆர்வம் அதிகமே.
கேள்வி:- சரி இப்போது கூறுங்கள்ää நடிகை என்ற வகையில் நீங்கள் உங்கள் வாழ்வில் எவ்வாறான தியாகங்களைச் செய்துள்ளீர்கள்?
பதில் :- குறிப்பிட்டுச் சொல்வதானால் நண்பர்களைத்தான் சொல்ல வேண்டும். அதிலும் போய்பிரண்ஸ்களைத்தான். முன்னரெல்லாம் நாளுக்கு நாள் எனது போய்பிரண்ஸ்களைச் சந்திப்பது வழக்கம். குறைந்தது நாளுக்கொரு நண்பரையாவது சந்தித்துக் கதைப்பேன். ஆனால் இப்போது அப்படி அவர்களைச் சந்தித்துக் கதைக்கமுடியாது. ஏனெனில் நான் இப்போது பலருக்கும் அறிமுகமாகியுள்ளதால் அப்படி எனது நண்பர்களைச் சந்தித்துக் கதைத்தால் போதும்ää ~~ஆஹா... அனார்க்கலிக்கு ஊரெல்லாம் போய்பிரன்ஸ் நிறைந்திருக்கின்றார்கள் என்று தப்பான கண்ணோட்டத்தோடு சொல்லிவிடுவார்கள். அதுதான் நடிகையானதும் அந்தப் பழக்கத்தை விட்டுவிட்டேன். உண்மையைச் சொல்வதானால் இப்போது அவர்களைச் சந்திப்பதை முழுவதாய் விட்டுவிட்டேன். அவர்களைச் சந்தித்தும் பலகாலம். இவ்வாறு பெருமூச்சுவிட்டவாரே சொன்னார் அனார்க்கலி.
கேள்வி :- போய்பிரன்ஸ் பற்றிக் கூறியதால் கேட்கின்றேன். உங்களுக்கு யாராவது லவ்வர் இருக்கின்றாரா..?
பதில் :- ஐயோ அப்படியொன்றும் இல்லையம்மா. எனக்கு அன்பு என்றால் ரொம்பவே பிடிக்கும். அது ஆணாக இருக்கட்டும்ää பெண்ணாக இருக்கட்டும். என்னோடு யார் அண்பாகப் பேசிப்பழகினாலும் அவர்களை என் நண்பர்களாக நான் ஏற்றுக் கொள்வேன். எனக்கு காசு - பணம்ää அந்தஸ்த்து இதை விட அன்பே மிகவும் பிடிக்கும். அதிலும் குழந்தைகள் என்றால் எனக்கு உயிர்.
எனது கனவு என்ன என்று நீங்கள் கேட்கத்தான் போகின்றீர்கள். அதற்கு நான் இப்போதே பதில் சொல்கின்றேன். உண்மையாக என் மீது அன்பு செலுத்தும் ஒரு ஆணை திருமணம் செய்து ஒரு சிறந்த தாயாக வேண்டும் அதுவே எனது அழகான கனவு.
கேள்வி:- கடந்த கால வாழ்க்கையில் உங்களைப் பற்றி...
பதில் :- ம்;... அதைப் பற்றி நானே சொல்கின்றேன். எதுவும் அளவு கடந்துவிடக்கூடாது என்பதுதான் கடந்த காலத்தில் நான் பெற்ற அனுபவம். நான் என் மீது அன்பு காட்டுபவர்கள் மீது அதைவிட பல மடங்கு அன்பு காட்டுவேன். அதன் விபரீதம் தான் என் கடந்த கால வாழ்க்கை. உண்மையில் எனக்கு அன்பு காட்டுபவரை வேற்றுமை பாராது நான் நேசிப்பவள். உண்மையில் இப்போது பாசம் என்றால் எனக்கு ரொம்பவே பயமாகத்தான் இருக்கின்றது. உங்களுக்கே தெரியும் என் வாழ்வில் என்ன நடந்தது என்று. அது ஒரு கசப்பான அனுபவம்ää என் வாழ்வில் நேர்ந்த மிகப்பெரும் அவமானம். ப்ளீஸ் அந்த அசிங்கத்தைப் பற்றி மேலும் கதைக்காமல் விடுவோமே...
~~இவ்வாறு பேசிய அனார்க்கலியின் வென்நிற முகம் சிவப்பாக மாறவேää கவலைத் தோய்ந்த குரலில் அவர் கெஞ்சிக் கேட்ட விடயத்தைப் பற்றி என்னால் எப்படி தொடர்ந்து கதைக்க முடியும்...? எனவே எனது கேள்விகளை நானும் திசைதிருப்பி விட்டேன்.||
கேள்வி :- அனார்க்கலி உங்கள் சொந்தப் பெயர் உண்மையில் அனார்க்கலி ஆகார்ஷாவா? அல்லது கலையுலகத்திற்காக மாற்றிக் கொண்ட பெயரா?
பதில் :- ஐயோ.. அது எப்படி சரியாகக் கண்டுபிடித்துவிட்டீர்கள்? உண்மையில் என் பெயர் அனார்க்கலி தான். ஒருமுறை எனக்கு வழங்கப்பட்ட வசனங்களை மனப்பாடம் செய்து கொண்டிருந்த வேளைää ஆகர்ஷா என்ற வசனம் என்னை கவர்ந்தது. எனவே அந்த வசனத்தை எனது பெயரில் இணைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும் என்று எனக்குள் தோன்றியது. அதைப் பற்றி அம்மாவிடம் கேட்டேன். அம்மாவும் ~அனார்க்கலி ஆகர்ஷா| என்ற பெயர் அழகாகத்தான் இருக்கின்றது. உன் விருப்பப்படியே செய்| என்றார். அப்போதே எனது பெயரை அனர்க்கலி ஆகர்ஷா என்று மாற்றிவிட்டேன். நீங்களே சொல்லுங்களேன்ää அனர்க்கலி என்பதை விட அனார்க்கலி ஆகர்ஷா என்னும் பெயர் அழகாகத்தானே இருக்கின்றது?
கேள்வி:- கலையுலகத்திற்குள் நுழைந்த உங்களால் கல்வியைத் தொடர முடியாமல் போய்விட்டதே. அதைப் பற்றி உங்களுக்குக் கவலையில்லையா?
பதில் :- நான் ஒத்துக் கொள்கின்றேன் எனது கல்வியை இடைநடுவில் நிறுத்திக் கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டது. கலையுலகப் பயணத்தால்தான் என்று. ஆனால் அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. நடிப்பு என்பது என் ஆசையை வென்ற தொழில் என்பதால் அந்தக் காலத்தில் நடிப்புத்துறையில் அதிக அக்கறை கொள்ள வேண்டியேற்பட்டது.
நடித்துறை மீது ஆசைகொண்ட எனக்குள் பத்து வருடங்களின் பின்னும் நான் மக்களால் சிறந்த நடிகை என்று புகழப்படவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதற்காக என்னையே நான் அர்ப்பணிக்க வேண்டியேற்பட்டதுää எனக்கு இப்போது 21 வயது. சின்ன வயதிலேயே சிறந்த நடிகையாகப் புகழப்படும் என்னால் கட்டாயம் இன்னும் பத்து வருடங்களின் பின்னரும் மக்களால் அப்டியே மதிக்கப்படுவேன் என்ற நம்பிக்கை இருக்கின்றது. கல்வி என்பது சமுதாயத்தில் போற்றப்படவேண்டிய அறிவைப் பெற்றுக் கொள்ளும் ஒரு துறை. அதனை நான் போதுமானளவு பெற்றுக்கொண்டுவிட்டேன். எனவே எனக்கு அதைப்பற்றி எந்தக் கவலையுமில்லை.
கேள்வி :- அனார்க்கலிää இப்போது நான் உங்களுக்கு ஒரு எட்வைஸ் பண்ணப் போகின்றேன்..
~~ஐயோ.. அதென்னம்மா அது...?||
~~பலர் சொல்கின்றார்கள் நீங்கள் உடல் தெரியும் வகையிலான உடைகளையே மிகவும் விரும்பி அணிவதாக. அது சரி... (இடைநடுவில் அவNரு நிறுத்தி..)
பதில்:- ~~ஐயோ போதும். நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள் என்று எனக்கு புரிகின்றது. நான் மட்டுமா அப்படி அணிகின்றேன். உடல் தெரியும் வரை உடைகளை நான் அணிகின்றேனே தவிரää ஆடைகளே இல்லாமல் செல்லவில்லையே. நீங்கள் இப்போது இந்தத் டவுன் ஹோல் பக்கம் என்னோடு வாருங்கள். நான் உங்களுக்குக் காட்டுகின்றேன் பெண்கள் எவ்வாறான ஆடைகளை அணிந்து செல்கின்றார்கள் என்று.
தேவையானளவு வயிற்றைக் காட்டிக் கொண்டு புடவைக் கட்டிக் கொண்டு போகும் சாதாரண பெண்கள்ää வேண்டியளவு குட்டையான பாவாடைகளை அணிந்து கொண்டு செல்லும் யுவதிகள். குறிப்பாக நாகரீமான உடையான புடவையைக் கட்டிச் செல்லும் பெண்களைப் பார்த்தால் சிரிப்புத்தான் வரும். அவர்களது புடவை ~இப்போது கழன்று விழுந்துவிடும்ää இப்போது கழன்று விழுந்துவிடும்| என்றவாறு இடுப்பையும் தாண்டியே அணியப்பட்டிருக்கும். இவர்களே இப்படி இருக்கும்போதுää எனது ஆசைப்படி நான் உடையணிவது தப்பா? நான் அணியும் ஆடைகளைப் பற்றி எனது பெற்றோருக்கே கவலையில்லை. மற்றவர்கள் ஏன் அதைப்பற்றி வீணாகக் கவலைப்படுகின்றார்களோ தெரியவில்லை. எனக்கு மற்றவர்கள் என்ன சொன்னாலும் கவலையில்லை. என் பெற்றோரின் விருப்பத்தோடு நான் எதை வேண்டுமென்றாலும் செய்தே தீருவேன்.
கேள்வி :- அனார்க்கலி உங்கள் சரியான வயதைச் சொல்ல முடியுமா?
விடை :- எதிர்வரும் ஜூலை மாதம் 12 ஆம் திகதிக்கு எனது வயது 22 ஆகும்.
கேள்வி :- உங்கள் உயிர் நண்பர்ää மறக்கமுடியாத நபர் யார்?
விடை :- எனது மம்மி... மம்மி... மம்மி...
கேள்வி :- நீங்கள் எப்படிப்பட்ட பெண் அனார்க்கலி?
பதில் :- எனக்கு அன்பு செலுத்துவதே பிடிக்கும். வாழ்வில் சிரித்து வாழவே பிடிக்கும். சின்னதொரு காரணத்திற்காகவும் நான் சிரித்துக் கொண்டே இருப்பேன். சின்ன பிள்ளைகளோடு கூடி விளையாடுவதென்றால் எனக்கு ரொம்பவே ஆசை. நீங்கள் கூட அப்படி விளையாடிப் பாருங்களேன் குழந்தையாகவே மாறிவிடுவீர்கள்.
கேள்வி:- ஆனார்க்கலி கடைசியாக ஒரு கேள்வி. நீங்கள் மிகப் பெரும் ஆசையாகக் கருதுவது எதை?
பதில் :- மீண்டுமொருமுறை குழந்தையாக மாறவேண்டும். என் தாய் வயிற்றில் மீண்டுமொருமுறை கருவுற வேண்டும். என்றுமே நான்கு வயதைத் தாண்டாது வாழவே பிடிக்கும்.
இதெல்லாம் நடக்கக்கூடிய விஷயமா என்று எனக்குள்ளேயே நான் கூறியவாறு விடைப்பெற்றேன்.
Hi, i had a glimpse of your blog and its excellent. I welcome you to view my blog at:
ReplyDeletehttp://encounter-ekambaram-ips.blogspot.com
Happy blogging.....