

எதிர்நோக்கவிருக்கும் காதலர் தினத்தை சந்தோஷத்தோடு கொண்டாடும் காதலர்களே இது உங்களின் மேலான கவனத்திற்கு.
குறிப்பாக இளைஞர்களே, இப்படியொரு நிலை உங்களுக்கும் நேர்ந்திடக்கூடாதென்ற நல்லெண்ணத்தோடு ஒரு இளைஞரது வாழ்வின் உண்மை நிலையை உங்களுக்குக் கதையாகச் சமர்ப்பிக்கின்றேன். இப்பகுதியூடாக இக்கதையின் முழு வடிவத்தையும் பார்வையிடுவதோடு மட்டுமல்லாது உங்கள் கருத்துக்களையும் மற்றவர்களுக்காகச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
மலிவான பொருட்களைக் கூட விலை மதிப்பற்ற பொருளாக மாற்றும் அளப்பரிய சக்தியைக் கொண்டது காதலர்கள் பரிமாறிக் கொள்ளும் பரிசுப் பொருட்கள் மட்டும்தான்.
தறுதலைப் பிடித்தவனையும் அப்பாவியாக மாற்றும் வல்லமை கொண்ட காதல் - அப்பாவியையும் தன் வலைக்குள் சிக்குண்ட வைத்து பித்துப் பிடித்தவனாய் மாற்றிவிடுகின்றது. இது காதலுக்கே உரித்தான மகத்தான தொழில். இப்படிப்பட்ட வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத காதல் - இந்தக் காதலில் உயிர்பெற்று, காதலுக்காகவே வாழ்ந்து, அந்தக் காதலாலேயே பல சாதனைகளையும் புரிந்து சிகரத்தைத் தொட்ட சந்தோஷத்தோடு மரணிக்கும் இளைஞர்கள் வாழும் இப்பூமியிலே காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்பவர்களும், குடிபோதைக்கு அடிமையாகி தான் கெட்டது மட்டுமல்லாமல் தன் சமுதாயத்தையே சீரழிவுக்குள் இட்டுச் செல்லும் இளைஞர்களும் இவர்களுக்குச் சளைக்காதவர்கள்தான். இதை உண்மையென்றுணர்த்தும் இந்த உண்மைக் கதையை நீங்களும் ஒருமுறை வாசித்துப் பாருங்களேன்.
அண்மையில் என்னோடு பாடசாலையில் படித்த நண்பரொருவரை எதிர்பாராத விதமாக சந்திக்க நேரிட்டது. கொழும்பில் வாழ்பவர்கள் பெரும்பாலும் சந்திக்கும்ää பொருட்களை வாங்கும் ஆஊயில் (ஆநதநளவiஉ ஊவைல) தான் அவரை சந்திக்க நேரிட்டது. வழமையாகவே துடுதுடுவென்றிருப்பவர் அவர். படிப்பிலும் சரிää விளையாட்டிலும் சரி அவரை மிஞ்சிட எமது வகுப்பில் மாத்திரமல்லää பாடசாலையிலும் கூட எவருமில்லையேன்றே சொல்லலாம். அவரை அதிபர்ää ஆசிரியர்கள் அனைவரும் சிறந்த நல்லொழுக்கமுள்ள மாணவர் என்று போற்றுவார்கள். அதைக் கேட்கும் எங்களுக்கு அவர் மீது சில சந்தர்ப்பங்களில் பொறாமையும் ஏற்படுவதுண்டு. அவ்வளவு அடக்கமானவர், அழகானவர்.
இப்படிப்பட்ட எனது நண்பரை சுமார் நான்கு வருடங்களுக்குப் பிறகு கையில் சிகரட்டுடன், தலைமுடியும் படர்ந்து வளர்ந்து, மெல்லிய தோற்றத்துடன் கையில் சிகரட் பெட்டியுடன் பார்த்தபோது பேரதிர்ச்சியாக இருந்தது. என்னைப் பார்த்ததும் திகைத்து நின்றவர் கையிலிருந்த சிகரெட் பெட்டியை தன் காற்சட்டைப் பைக்குள் போட்டுவிட்டு புகைத்துக் கொண்டிருந்த சிகரட்டை ஓரமாக வீசியெறிந்துவிட்டு தன்னைச் சுதாகரித்தவாறு என்னுடன் கதைக்க ஆரம்பித்தார்.
~~அப்பாடா எவ்வளவு நாளைக்குப் பிறகு சந்திக்கிறோம். எப்படி சுகம் என்று கேள்விகளோடு ஆரம்பித்த நமது சந்திப்பை அப்படியே விட்டுவிட எனக்கு உண்மையில் மனம் வரவில்லை. நாம் வாழ்ந்த அந்த ஊரே போற்றுமளவுக்கு வாழ்ந்த, வளர்ந்தவர் எப்படி இவ்வாறு? என்று எனது மனம் கேள்விக்கு மேல் கேள்விகளை அடிக்கிக் கொண்டே போனது. அந்தக் கேள்விகளுக்கு விடைதேட முற்படுவதை உணர்ந்து கொண்ட எனது நண்பர், தன்னைப் பற்றியும், கடந்த நான்கு வருடங்களில் தன்னையே மாற்றிவிட்ட அந்தக் காதலைப் பற்றியும் சொல்ல ஆரம்பித்தார்.
க.பொ.த. சாதாரண தரத்தில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றவர்களில் முதலிடத்தில் தனது பெயரைப் பதித்துக் கொண்டவர் (இவ்விடத்தில் அவரது பெயரை சுரேஷ் என்று வைத்துக் கொள்வோம்) சுரேஷ். நாம் கற்ற பாடசாலையில் தொடர்ந்து க.பொ.த. உயர்தரம் கற்கக்கூடிய வாய்ப்பில்லாத காரணத்தினால் நண்பர்கள் அனைவரும் தத்தமது வசதிக்கேற்றாற் போல் பாடசாலைகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டோம். சுரேஷ் தனது அம்மம்மாவின் வீட்டில் தங்கியிருந்து அங்குள்ள ஒரு மகாவித்தியாலயத்தில் க.பொ.த. உயர்தரத்தைத் தொடர்ந்திருக்கின்றார். அப்போதுதான் அந்தப் பாடசாலையில் பத்தாம் வகுப்பு மாணவியான மல்லிகாவை காதலித்திருக்கிறார். மிகவும் அடக்கமான சுரேஷ், அழகான அந்த மல்லிகாவிடம் தன் காதலை நண்பர்கள் மூலம் தெரிவிக்க, அவளும் இரு நாட்களின் பின்னர் ஏற்றுக் கொண்டாள். பணத்திலும், அழகிலும், அடக்கத்திலும் ஒன்றுக்கொன்று சளைக்காத சுரேஷின் காதலும் அந்த பாடசாலையிலேயே கொடிகட்டிப் பறந்தது.
ஆனால் சுரேஷிற்கு இந்த சந்தோஷம் தொடர்ந்து நிலைக்கவில்லை. ஒரு வருடத்திற்குள்ளாகவே தன் தந்தையின் இருதய சத்திர சிகிச்சைக்காக தனது தந்தை சேமித்து வைத்த அனைத்துச் சொத்துக்களையும் விற்று - மேலதிகமாக தேவைப்பட்ட பணத்தை உறவினர்களிடம் கடனாகப் பெற்றுக் கொண்ட சுரேஷின் குடும்பம்ää தந்தையின் மருத்துவச் செலவுக்கே அதிக பணத்தை செலவழிக்க நேரிட்டதால், காலப் போக்கில் மீளமுடியாத கடன் பிரச்சினைக்குள் தள்ளப்பட்டது.
தன்னைக் காதலிப்பதாகக் கூறிய மல்லிகாவுக்காகவே வாழ்ந்து அவளையே உயிராக நினைத்த சுரேஷ், தமது கல்வியை இடைநடுவில் விட்டுவிட்டு ஒரு சாதாரண புடவைக் கடைக்கு தொழிலுக்குச் சென்றான். எத்தனை சுமைகளையும் தாங்கிக் கொள்ள துணையாக நின்ற மல்லிகாää சுரேஷின் வீட்டிற்குக் கடன்காரர்கள் வந்து போவதையும், கடன் தொல்லையால் சுரேஷின் குடும்பம் படும் கஷ்டத்தையும் உணர்ந்து கொண்டு தன் காதலை அலட்சியம் செய்ய ஆரம்பித்தாள்.
இப்படி வாரம் மாதமாகää மாதம் வருடமாக, இரண்டு வருடங்களின் பின்னர் க.பொ.த. சாதாரண தரத்தில் தோல்வியுற்ற மல்லிகாவின் அழகில் மயங்கிய கதிரின் பெற்றோர் மல்லிகாவின் பெற்றோரிடம் வந்து லண்டனில் தொழில் செய்யும் தனது மகன் கதிரிற்குத் தன் மகளை தருமாறு முறைப்படி பெண் கேட்டார்கள். உடன் திருமணமும் நிச்சயிக்கப்பட்டது.
ஒரு வாரம் கடந்து சுரேஷைச் சந்தித்த மல்லிகா தனது திருமணத்தைப் பற்றி கூறியதோடு, தன்னைக் காதலித்த விடயத்தை யாரிடமும் கூறவேண்டாமென்றும் சத்தியம் வாங்கிவிட்டுச் சென்றுவிட்டாள். இடைநடுவில் சில கருத்து முரண்பாடுகளும் எழவேää கலங்கிய கண்களோடு மல்லிகாவின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டான் சுரேஷ். இருந்தும் உயிராய் எண்ணிய காதலி - வெறும் பணத்திற்கு மயங்கி தன்னை மட்டுமல்லாது தன் காதலையும் அலட்சியம் செய்ததை தாங்கிக் கொள்ள முடியாத சுரேஷ், மல்லிகாவை வெறுப்பதற்குப் பல முயற்சிகள் செய்தாலும், முடியாது போக மனம் உடைந்துபோனான். தன் கற்பனைக்குள்ளும்ää கனவுகளுக்குள்ளும் மல்லிகாவையே சுமந்த சுரேஷினால் அவளது திருமணத்தை நேரில் கண்டதும்ää சொல்ல முடியாத சோகம் அவனைத் தாக்கியது. தன் சோகத்தை மறப்பதற்கு முனைந்த சுரேஷிற்கு கெட்ட நண்பர்களது சகவாசம் ஆறுதலாக இருந்தது. அவர்களது உதவியால் போதைப் பொருட்களுக்கு அடிமையாகிய சுரேஷ் ஆறு மாதங்கள் போதைப் பொருள் பாவித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்புதான் வெளியே வந்ததாகவும் கண்ணத்தைத் தொட்ட கண்ணீரைத் துடைத்தவாறு தெரிவித்தார்.
யாரை உயிராக நினைத்தானோää அவளாலேயே காயப்பட்டää அவமானத்திற்குள் தள்ளப்பட்டதைத் தாங்கிக் கொள்ள முடியாத சுரேஷ்ää அந்த ஞாபகங்கள் வரும்போதேல்லாம் சிகரெட் பாவிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். ஒரு நாளைக்குக் குறைந்தது ஒரு பெட்டி சிகரெட்டையாவது அருந்துவதை வழக்கமாகக் கொண்ட சுரேஷ், ஒரு இரத்தப் புற்றுநோயாளி என்பதை கடந்த ஞாயிற்றுக் கிழமை அவரது வீட்டுக்குச் சென்ற வேளைதான் அவரது தாயாரினூடாக அறிந்து கொள்ள முடிந்தது.
சேர்த்து வைத்த சொத்துக்களையெல்லாம் தன் மருந்துச் செலவுக்காக உபயோகித்தும், மேலதிக பணத்திற்கு இருந்த கடையையும் விற்றும் குணப்படுத்த முடியாத இருதய நோயால் தன் கணவனை இழந்த சுரேஷின் அம்மாவிற்கு இருந்த ஒரே ஆறுதல் சுரேஷ் தான். ஆனால் இன்று சுரேஷின் நிலையைக் கூறி கதறியழும் தாயின் அழுகுரலுக்கு இந்தப் பாலாய்ப் போன காதல் தான் காரணம் என்பதை அறிந்ததும், முதலில் காதலுக்காகக் காவியம் படைத்தவர்கள் மீதும், அதற்காய் தன்னை அர்ப்பணித்தவர்கள் மீதும் சற்றுக் கோபம் வரத்தான் செய்கின்றது.
No comments:
Post a Comment