Wednesday, February 10, 2010

நான் ரசித்த கவிதை!


நான் படித்துச் சுவைத்த
கவிதைகளில் - உன் பெயரைப்
போல் எதுவுமே
இல்லையடி..!
நான் பிரசுரித்த கவிதைகளிலும்
நீ ரசித்த கவிதைப் போல்
எதுவுமே இல்லையடி!

அமாவாசை இருட்டில்
கவிதை எழுதியவன் - நான்
பௌர்ணமி நிலவாய்
என் இதய வானில்
ஜொலித்தவள் - உன்
துணைகொண்டு வடிக்கும்
கவிதைகளையே மிஞ்சுகின்றதடி
கொஞ்சலாய்
பிறக்கும் - உன் பெயர்!
-ஹிமாயா ஹமீட், கொழும்பு-12.

No comments:

Post a Comment