
காதல் என்னும் மூச்சை
சுவாசித்தவாறே - பூலோகம்
சுற்றினோம் - நாம்
இருந்தும் ஏனோ
நமக்குள்ளும் காதல் தோல்வி
குடிகொள்கின்றது!
இறப்பில் சரித்திரம்
படைத்திட்ட - காதலர்கள்
மத்தியில் - சிறப்பில்
கால் பதிக்கவே
நாமும் ஒருவரை
ஒருவர் காதல்
கொண்டோம்!
விதியின் விளையாட்டால்
இறப்பின் சரித்திரத்திலே
மூழ்கடிக்கப்பட்டோம்!
இதயங்கள் இணைந்திட்ட நாம்
இன்று நட்சத்திரங்களாய்
மாறி காதலித்துக்
கொண்டிருக்கின்றோம்!
மறுஜென்மத்திலாவது
இதயங்களின் சங்கமிப்போடு
உயிர்களும் இணைந்திட்ட
காதலர்களாய்
பிறக்கவேண்டுமென்ற
பிரார்த்தனைகளோடு!!
-ஹிமாயா ஹமீட், கொழும்பு-12.
No comments:
Post a Comment