Wednesday, February 10, 2010

காதல் சரித்திரம்!


(எனக்குள் பிறந்திட்ட புதுக் கவிதை)
ஆண் - பெண்
உறவைப் படைத்த
கடவுள் - நடுவில்
காதலையும்
படைத்ததால்
நாமும்
காதலையே சுவாசமாய்க்
கொள்கின்றோம்!

சாஜஹான் - மும்தாஜ்
லைலா - மஜ்னு
வரிசையில் காதலை
சுவாசிப்பவர்கள் - ஏனோ
தோல்வி தனைத்
தழுவியதும்
உயிர்துறக்கின்றோம்!

காதலின் சரித்திரம்
மாற்றிடவே - நமக்குள்
சிறைப்பட்ட காதல் தோல்வியை
நம் உயிர் மூச்சாய்
உணர்ந்து
வாழ்க்கைதனை
வெற்றியின் சமர்ப்பணத்திற்காய்
வாழ்ந்திடுவோமே - காதலுக்கும்
புதியதோர் சரித்திரம்
படைத்திடுவோமே...!
-ஹிமாயா ஹமீட், கொழும்பு-12.

No comments:

Post a Comment