Tuesday, February 16, 2010

சூரியன் FM (11.02.2010) கவித் தலைப்புக்களுக்கான கவிதைகள்

காத்திருந்த காதல்!
உதட்டிலே - மாயங்கள்
புரிகின்ற - உயிர் வரைக்கும்
வேதனை தருகின்ற
இந்த அழகை உனக்குத் தந்தவன்
என்றோ ஓர்நாள்
உன்னையே உனக்குத் தருவான்!
எதிர்பார்ப்புக்களோடு காத்திருக்கின்றேன்
உதிரம் தோறும் - உன்
காதலைச் சுமந்தவாறு!

கண்மூடாக் காதல்!
என் வாழ்வுக்கு
நட்சத்திரமாய் திகழ்ந்த - உன்
புன்சிரிப்பு என்விழிகளுக்குள் - உறவாடி
மகிழ்வதால் - கண்மூடாக்
காதலாய் - என் காதல்
வாழ்ந்து கொண்டிருக்கின்றது.

கண்ணீர்க் காதல்
தொப்புள் கொடி உறவையே
தூக்கியெறிந்தவன் - என்னையும்
ஏதோவொரு தருணத்தில்
தூக்கியெறிந்துவிட்டால்..!
இல்லை - அது எத்தனை ஜென்மமானாலும்
நடவாது - நடக்கக்கூடாதென
காதலை கண்ணீராய்ச் சுமந்தவாறு
இறைவனைப் பிரார்த்தித்துக்
கொண்டிருக்கிறாள் - உற்ற மடந்தையவள்...

உறங்காத உள்ளம்!
ஊரும் உறங்கிவிட்டது
என் வீடும் உறங்கிவிட்டது
இரவுப் பொழுதில் - தன்
தொழில் முடித்து - நட்சத்திரங்களும்
உறங்கிவிட்டது - உன் கனவுகளையே
காதலாய் கொண்ட கண்களும் - இனிதே
உறங்கிவிட்டது - இருந்தும்
உன் ஞாபகங்களைச் சுமந்த
உள்ளம் மாத்திரம் உறக்கமே இன்றி
தினமும் விடிகின்றது!

ஞாபகத்தில் நீ!
என் ஞாபகங்கள் தோறும்
நீ இருப்பதால் - பசிகூட
என்னை வெறுத்துவிட்டது!

யாருக்காகவும் கண்ணீர்
வடிக்காத என் விழிகள்
இன்று கண்ணீருக்கே
அடிமையாகிவிட்டது!
பயந்துவிடாதே - வெள்ளப்
பெருக்கே என் கண்களைச் சுமந்தாலும்
உன் ஞாபகங்கள் என்றும்
அழிந்துவிடாது!!

No comments:

Post a Comment