

இந்த வருடம் வழமையை விடவும் அளவு கடந்த வேலைகள் தலைக்கு மேல் சுயம்வரம் செய்து கொண்டிருப்பதால் சரி ஒரு மாற்றத்திற்காக வடக்கு, கிழக்கு பக்கம் போய் வரலாம் என்று தீர்மானித்தேன். அடுத்த நாளே கொழும்பிலிருந்து புறப்பட்டேன். சரியாக 45 நிமிடங்கள். வவுpயாவில் கால் பதித்தாகிவிட்டது. நேரம் காலை 10.30 மணியிருக்கும். யம்மாடியோவ் இப்படியெல்லாம் ஒரு ஊரில மக்கள் வாழத்தானே செய்றாங்க. நாம கூட இருக்கிறோமே, கொஞ்ச நேரம் மின்சாரம் இல்லாமல், தண்ணீர் இல்லாமல், குப்பைகளின் துர்நாற்றம் ஒரு ஐந்து நிமிடம் எம்மைத் தாக்கினாலும் தாங்கமுடியாது. ஆனால் அந்த மக்களின் நிலை.
இப்படியே மனம் கேட்ட கேள்விகளுக்கு பதில் தேடியவாறு ஆளுக்கொரு ஆசனத்தில் அமர்ந்தவாறு சென்றாகிவிட்டது. யோசனைகளோடே நேரமும் நம்மைக் கடந்து சென்றது. அடுத்த கொஞ்ச நேரத்திற்குள்ளாகவெ சூரியனும் விடைபெறத் தொடங்கிவிட்டது. மாலை 3.30 மணியிருக்கும். ஒரு வயோதிபர் அந்த வீதியால் வந்தார். நாங்கள் அவருடன் கதைத்தோம்.
"ஐயா, இது உங்கள் சொந்த ஊரா" என்று கேட்டவாறு தொடர்ந்த எமது உரையாடல் 4.30 மணியையும் தாண்டியது. திடீரென அந்த வயோதிபர் "பிள்ளைகளா இனி இந்த இடத்தில் இருப்பது நல்லதல்ல. உங்கள் இருப்பிடங்களுக்கு உடன் சென்றுவிடுங்கள்" என்று கூறிவிட்டு அவரும் சென்றுவிட்டார். அப்படி என்ன தான் அங்கு இருக்கின்றது என்று ஆராயமுற்பட்டோம். தொடர்ந்து நடந்திட்டவேளை, ""யம்மா யம்மா, எங்கம்மா போறீங்க, இந்த நேர்தில இந்தப் பக்கமெல்லாம் பொண்ணுங்க வரக்கூடாது. தயவு செய்து போய்விடுங்க"" என்றார் ஒரு மூதாட்டி. "அம்மா கொஞசம் நில்லுங்க. அப்படி என்ன தான் இருக்கு இங்க?" என்று நான் அவரிடம் கேட்ட கேள்விக்கு அவர் தந்த பதில் இது.
""இங்கெல்லாம் முன்னம் மாதிரி இல்லம்மா. ஆறு மணியானால் பேய், மோகினிகளின் நடமாட்டம் அதிகரிச்சுப் போய்ட்டுது. அவசரமெண்டால் கூட யாரும் வீட்ட விட்டு வெளியே வரமாட்டோமம்மா. இந்த மோகினிகள், நிறைவேறாத ஆசைகளோடும், நிறைவேறாத கனவுகளோடும் இறந்து போனதால ஆவிகளா திரிஞ்சிக்கிட்டு இருக்குதம்மா. பக்கத்து ஊருல ஊட ஒரு 18 வயதுப் பொண்ண மோகினி பிடிச்சு ஆட்டிப் படைச்சிக்கிட்டு இருக்கு. யம்மா இதுகு மேல எதுவும் கேட்கவேண்டாம். தயவு செய்து வீடுகளுக்குச் செல்லுங்கோ" என்றது மட்டும்தான், "இனி கொஞ்ச நேரம் கூட இந்த ஏரியாவிலேயே இருக்கமாட்டோம்" என்ற முடிவோடு விட்டோம் பாருங்க ஓட்டம். அப்படி இப்படி ஓட்டமில்ல. வடிவேல் சொல்லுமாப்போலை "பொலிஸ்காரர்கள் கூட ட்ரைனிங்ல கூட அப்படி ஓடியிருக்கமாட்டாணுங்க" அப்படியொரு ஓட்டம். அடுத்த 45 நிமிடத்தில் கொழும்பில வந்து சேர்ந்திட்டோம். இனி எப்போதுமே அங்க போகமாட்டோம் என்ற முடிவோடு.
(இதெல்லாம் சும்மா டப்பாக் கத!
வாசிப்பதற்கு மட்டும்தான். யோசிப்பதற்கு இல்லை.)
No comments:
Post a Comment