Friday, March 5, 2010

ஒட்டுதல்..!


-நடிகர் பத்மஸ்ரீ கமல்ஹாஸன்-
எனது இடது கையில் ஒரு கொப்புளம். எப்படி சுட்டுக் கொண்டேன் என்ற எனக்குத் தெரியாது. சிலவேளை சுடச்சுட டம்ளரைப் பிடித்து தேனீர் குடிப்பதால் ஏற்பட்டதாக இரக்கலாம். எந்த உபாதையும் தராத மெழுகுக் குமிழிப் பொன்ற கொப்புளத்தை உடைக்க எத்தணித்த போது, "கொப்புளத்தை எடைப்பது தப்பு" உன்று டாக்டர் சொல்லியிருக்கின்றார். அவர் பேச்சைக் கேட்காமல் அவசரப்பட்டு உடைத்தால் "செப்டிக்" ஆகலாம். பின்னர் டாக்டரிடம் ஓடவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.
"அவர் என்னவோ தன் கையிலிருந்த கொப்புளத்தை உடைத்துவிட்டதைப் போல், கண்ணை உருட்டிப் பெருமூச்சு விட்டபடி, நான் ஏதோ குழந்தைத்தனமான செயல் செய்துவிட்டதைப் போல் கத்தித் தீர்ப்பார். என்ன செய்யலாம், பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்கின்றதே.." என்று யோசித்தவாறே சோபாவில் அமர்ந்திருந்தேன். அப்போது தான் மனோகர் வந்து சேர்ந்தார்.
"ஏய் இன்று ஒரு பார்ட்டிக் போய் வரலாம்"
மனோகர் அழைத்தது ஒரு சிந்திக்காரனின் பிறந்த நாள் பார்ட்டிக்கு.
"மௌனம்..."
"நீ வரமாட்டேன்னு எனக்குத் தெரியும். இருந்தும் ஏன் கூப்பிட்டேனென்றால் உன்னோட ஃபேபவரிட் ஆளு ஒருத்தர் பார்ட்டிக்கு வாரார்?"
"யாரு...?"
"கெஸ் பண்ணு பார்ப்போம்"
""ஏய் யாரென்று தான் சொல்லுங்களேன்"
மனோகரன் வாயால் பல வாத்திய இசை ஒலிகளை சினிமாப் பாணியில் எழுப்பிவிட்டு பார்ட்டிக்கு வரப் போகும் ஆளின் பெயரைச் சொன்னார். ரங்கராட்டினம் சுற்றியது போல் என் வயிற்றுக்குள் ஒரு சந்தோஷமான கிளுகிளுப்பு வட்டமிட்டது.
"பூ.... இவ்வளவுதானா? சரி.. ஈவினிங் சினிமாவுக்கு டிக்கெட் கிடைக்கலேன்னா வாறேன்" என்று அளுப்பில் கூறுவதைப் போல் (உள்ளுக்குள் ஏற்பட்ட அளப்பரிய சந்தோஷத்தை மறைத்துவிட்டு) சொன்னேன்.
மனோகரனுக்கு அந்த நடிகரைப் பிடிக்கவே பிடிக்காது. "அவனுக்கு பொட்டை மாதிரி மழுன்னு மூஞ்சி" என்பார். அவருக்கு நடிகர் என்றால் பி.யூ.சின்னப்பாதான் பிடிக்கும். சின்ன வயதிலிருந்தே மனதில் பதித்துவிட்ட பெயர். மாற்றிக் கொள்ள மறுக்கின்றார்.
இப்படித்தான் ஒருநாள்.....
(தொடரும்)
(இனித்தான் கதையின் கிளைமேக்ஸ்)

No comments:

Post a Comment