
நினைவில் ஓர் காதல்..!
வளிமண்டலத்தில்
விழித்திருந்து காதல்
செய்து,
மேகத்தில் மோகம் கொண்டு,
வானவில்லில் படுத்துறங்கி
பல வர்ணங்களில்
கனவு கண்டு
சந்திரமண்டலத்தில்
ஓடி விளையாடி
கானல் நீரைப்
பருகி தாகம் தீர்த்து
செவ்வாயிலே கண்ணீரை
தண்ணீராய்ப் பொழிந்து
உலக சாதனையில்
என்னையும் சேர்த்திட்ட
என் முதல்
காதல் - இன்றும்
என் நினைவில்...!
-ஹிமாயா ஹமீட், கொழும்பு-12.
No comments:
Post a Comment