Friday, March 5, 2010

மாற்றம்!

என் தோட்டத்து
மரங்கள் - மொட்டையாய்
நிற்கின்றது - கேட்டால்
இலையுதிர் காலமாம்...!

வானமோ
கறுப்புடையணிந்து துக்கம்
அனுஷ்டிக்கின்றது - கேட்டால்
மாரி காலமாம்...!

என் கூட்டுப்
பறவைகள் - மௌன அஞ்சலி
செலுத்துகின்றன - கேட்டால்
மதிய நேரமாம்...!

என் இதயமோ
தன்பாட்டில் விம்மி
வெடிக்கின்றது - கேட்டால்
எதிர்காலத்தின் ஒத்திகையாம்..!

இமைகளோ
கண்ணில் படராது
தவம் செய்கின்றது - கேட்டால்
விரதமாம்..!

கலத்திலேன் - ஒரே நேரத்தில்
இத்தனை மாற்றம் - என்ற
கேள்விக்கு பதில்
தேடியபோதுததான்
புரிந்தது - இது
காலத்தின் மாற்றமல்ல
காதலின் மாற்றமென்று...!
-ஹிமாயா ஹமீட், கொழும்பு-12.

No comments:

Post a Comment