
சில பெண்களுக்கு உடலில் சூடு அதிகமாக இருக்கும். இதனை இரட்டிப்பாகக் கொண்டவர்கள் ஆண்களேயாகும். இவர்கள் பகலில் அடிக்கடி தூங்கி விழுவதுடன், இரவில் புரண்டுப் புரண்டுப் படுத்தாலும் தூக்கம் இவர்களைத் தீண்டுவது மிகவும் கடினம். இவர்கள் அடிக்கடி கோபம் கொள்வார்கள். எப்போதும் கடுப்பாகவே இருப்பார்கள். இவர்களுக்கு பகலில் விட இரவில் தாகம் அதிகமாகவே எடுக்கும். போதைக்குறைக்கு தலைவலி, தடிமன் போன்ற நோய்களும் அடிக்கடி வந்து தொந்தரவு கொடுக்கும்.
இப்படியானவர்கள் இவ்வாறான நிலையிலிருந்து தம்மை சீர்ப்படுத்திக் கொள்வதற்கு என்ன வழிவகைகளை மேற்கொள்ளலாம் என்று திணறிக் கொண்டிருப்பார்கள். இவ்வாறானவர்களுக்கு சரியான - இலகுவான வழி என்ன தெரியுமா…?
செம்பருத்தி இலைகள் இரண்டு கைப்பிடி எடுத்து நீரில் போட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவேண்டும். நன்றாக செம்பருத்தி இலை வெந்ததும், 10 நிமிடங்களின் பின்னர் அடுப்பிலிருந்து இறக்கினால் இலைகள் அவிழ்ந்து கூழ் போன்றிருக்கும். பிறகு மிகுதி இலைகளை அகற்றிவிட்டு அந்தக் கூழ் நன்றாக ஆறிய பின் உடல் முழுவதும் பூசி குறைந்தது பத்து நிமிடங்களின் பின்னர் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். இவ்வாறு வாரமொருமுறை செய்து வந்தால் உடல் உஷ்ணம் தணிந்து உடல் குளிர்மையடைவதுடன், ஆரோக்கியமான வாழ்வும் கிடைப்பதற்கு வழி ஏற்படும். செலவுகளே இல்லாமல் இளமையாய் இருக்க இது சிறந்த வழியென்பதும் குறிப்பிடத்தக்கதே.
No comments:
Post a Comment